சென்னை சூளைமேடு பகுதி பத்மநாபா நகரில் உள்ள அம்மன் தெருவில் மூன்று தளங்கள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று உள்ளது. இதில் சுமார் 13 குடும்பங்கள் வசித்துவருகின்றன.
இந்நிலையில், நேற்று காலை குடியிருப்பில் வசிப்பவர்கள் வழக்கம்போல் வேலைக்குச் சென்றுள்ளனர். இதனை நோட்டமிட்ட திருடர்கள், ஆளில்லாத குறிப்பிட்ட சில வீடுகளின் பூட்டை உடைத்து அங்கிருந்து நகைகள் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
வீடுகளில் பூட்டுகள் உடைக்கப்பட்டதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி வீடுகளின் உரிமையாளர்கள் அங்குவந்து பார்த்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில் அங்கு விரைந்துவந்த சூளைமேடு காவல் துறையினர் வழக்குப்பதிந்து அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து திருடர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
திருடர்கள் திருடிய பொருட்கள் விவரம் கீழே அட்டவணையில்...
உரிமையாளர்களின் பெயர் | தங்க நகைகள் (சவரனில்) | ரூபாய் |
வாசு | 13 | 14,000 |
சிவக்குமார் | 3 | 20,000 |
குமார் | - | 8,000 |
மொத்தம் | 16 சவரன் | 42,000 |