ETV Bharat / jagte-raho

ஓட்டைப் பிரித்து கொள்ளையடித்த திருடன் 3 ஆண்டுகளுக்கு பிறகு கைது!

மதுரை: கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு ஓடுகளை உடைத்து நகை, பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்த திருடனை காவல்துறையினர் இன்று (டிச.24) சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர்.

theft
theft
author img

By

Published : Dec 24, 2020, 9:18 PM IST

மதுரை மதிச்சியம் வைகை வடகரை பகுதியில் இன்று (டிச.24) வாகனத் தணிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நடந்து சென்ற ஒருவரை சுற்றி வளைத்து காவல்துறையினர் விசாரணை செய்தனர்.

அவர், உசிலம்பட்டி அல்லிகுண்டம் பகுதியைச் சேர்ந்த கர்ணன் என்பவரின் மகன் காசிமாயன் (25) என்பது தெரியவந்தது. இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் எனவும் தெரியவந்தது.

மதுரை மதிச்சியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் ஓட்டை பிரித்து நகை, பணம் உள்ளிட்டவற்றை கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு கொள்ளையடித்ததாக மூன்று வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளன.

தேடப்படும் நபராக இருக்கும் நிலையில், இன்று கையும் களவுமாக பிடிபட்டவரிடம் இருந்து இரண்டரை பவுன் தங்கச் சங்கிலி மீட்கப்பட்டதுடன் மதுரை மாவட்ட நீதிமன்ற காவலில் ஆஜர் படுத்தப்பட்டு மேலூர் கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: அழகிரி தேர்தல் பங்களிப்பை வரவேற்கிறேன் - அண்ணாமலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.