வடசென்னை பகுதியில் உள்ள கோயில்களில் உள்ள உண்டியல்கள் உடைக்கப்பட்டு பணத்தைத் திருடிச் செல்வதாகக் காவல் துறையினருக்குப் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து, காவல் துறையினர் கோயில்களில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையனைக் கைது செய்தனர்.
காவல் துறையினர் பிடிபட்டவரிடம் விசாரித்தபோது அவர் பழைய வண்ணாரப்பேட்டை கிழக்கு கல்லறை சாலையைச் சேர்ந்த பரத் என்பது தெரியவந்தது.இவர் அப்பகுதியில் உள்ள 17 கோயில்களின் உண்டியலை உடைத்து திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து, அவரிடமிருந்து கோயிலில் இருந்து திருடு போன ஒரு மடிக்கணினியைக் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், பழைய வண்ணாரப்பேட்டை, ராயபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள கோயில்களில் உண்டியலை உடைத்து பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற இளைஞனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.