தெலங்கானா மாநிலம் மெஹ்பூப்நகர் டொகுரு பகுதியில் வசித்துவரும் எருக்கலி ஸ்ரீனு என்ற நபர், நகைக்காக பெண்ணை கொலை செய்த வழக்கில் அம்மாநில காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட எருக்கலி ஸ்ரீனுவிடம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அதிர்ச்சிக்குரிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீனு தனது மனைவியுடன் சேர்ந்த தொடர் நகைக்கொள்ளையில் ஈடுபட்டதாகவும், அத்துடன் கொள்ளைச் சம்பவங்களின் போது பலரைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.
தனது உடன்பிறந்த தம்பியை தகராறு காரணமாக கொலை செய்த வழக்கும் ஸ்ரீனு மீது பதியப்பட்டுள்ளது. மெஹ்பூப்நகர், ஷம்ஷாபாத், ஷதாநகர் ஆகிய பகுதிகளில் இதுவரை 16 கொலைக் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறி ஸ்ரீனு மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடைசியாக டோக்குரு பகுதியில் அலி வெல்லம்மா என்ற பெண்ணை கடந்த 16ஆம் தேதி கொலை செய்த குற்றத்தின் பேரில், ஸ்ரீனுவை காவல் துறையினர் தற்போது கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாலிவுட் 2019: சிறந்த அறிமுக நடிகர்கள் பட்டியல்