தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள நெல்கட்டும்செவல் பச்சேரியைச் சேர்ந்தவர் குருசாமிபாண்டி. இவரது மனைவி வெள்ளத்தாய். இவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டிலேயே குழந்தை பிறந்தது. இதனைத் தொடர்ந்து வெள்ளத்தாய் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று (அக்.4) மாலை மருத்துவமனையில் உள்ள கழிவறையில் சேலையால் தூக்கிட்டு அவர் தற்கொலை செய்துகொண்டார். இதனைப் பார்த்த சக நோயாளிகள் மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கரன்கோவில் நகர் காவல் துறையினர் அவரது உடலை மீட்டு உடற்கூராய்விற்காக மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தற்கொலைக்கான காரணம் என்ன? குடும்பத்தில் ஏதேனும் தகராறா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 2ஜி வழக்கில் இன்று முதல் விசாரணை!