ETV Bharat / jagte-raho

தொழிலாளிகளின் சம்பள பணத்தை திருடிய மேற்பார்வையாளர் கைது!

கோவை: சம்பளத்துக்காக எடுத்து வந்த பணத்தை திருடிச் சென்ற கட்டுமான மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டார்.

Supervisor arrested for looting salary money
தொழிலாளிகளின் சம்பள பணத்தை திருடிய மேற்பார்வையாளர் கைது
author img

By

Published : Oct 3, 2020, 10:35 PM IST

கோவை குறிச்சி சிட்கோ பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவர் விஸ்வகர்மா கன்ஸ்டரக்‌ஷன் என்ற பெயரில் கட்டுமான தொழில் செய்து வருகிறார்.

மதுக்கரை பகுதியில் கட்டுமான பணி நடைபெறுவதையொட்டி அங்கு பணியாற்றுபவர்களுக்கு சம்பள பணம் கொடுக்க அவர் காரில் சென்றுள்ளார்.

இந்நிலையில் காரில் இருந்த ஒரு லட்சம் திருடுபோய் உள்ளது. இதுகுறித்து மதுக்கரை காவல் நிலையத்தில் மாணிக்கம் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் விசாரணை மேற்கொண்ட காவலர்களுக்கு, கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த சீனிவாசன்(27) என்பவர் மீது சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் அவரும் மாயமானது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சீனிவாசனை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் மதுக்கரை மார்கெட் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்தது.

பின்னர் அங்குசென்ற காவலர்கள், அவரிடம் திருடுபோன பணம் இருப்பதை கண்டறிந்தனர். இதனைத்தொடர்ந்து ஒரு லட்ச ரூபாயை சீனவாசனிடமிருந்து பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

இதையும் படிங்க: பைக்கை கொளுத்திய இரண்டு பெண்கள் யார்? போலீஸ் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.