ETV Bharat / jagte-raho

'எஸ்ஐ வில்சனை இப்படித்தான் கொன்றோம்...!' - நடித்துக்காட்டிய கொலையாளிகள் - எஸ்ஐ வில்சன் கொலை வழக்கு

கன்னியாகுமரி: களியக்காவிளை சோதனைச்சாவடியில் பாதுகாப்புப் பணியிலிருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் பிடிப்பட்ட கொலையாளிகள், கொலை சம்பவம் எப்படி நடந்தது என்பதை காவல் துறையினருக்கு நடித்துக் காட்டினர்.

Ssi murder accused acting enquiry, எஸ்ஐ வில்சன் கொலை வழக்கு, si wilson murder
எஸ்ஐ வில்சனை கொலை செய்தது குறித்து நடித்துக் காட்டிய கொலையாளிகள்
author img

By

Published : Jan 25, 2020, 7:38 PM IST

களியக்காவிளை சோதனைச்சாவடியில் காவல் பணியிலிருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் ஜனவரி 8ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். வில்சனை சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் அப்துல் சமீம், தவுபீக் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.

பயங்கரவாத செயல்களில் தொடர்புடைய இவர்கள் இருவரையும் காவல் துறையினர் 10 நாள் காவலில் எடுத்து விசாரித்துவருகிறார்கள். கடந்த இரண்டு நாள்களில் வில்சன் கொலைக்குப் பயன்படுத்திய துப்பாக்கி, கத்தி போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. துப்பாக்கியை எர்ணாகுளம் கழிவுநீர் ஓடையிலிருந்தும், கத்தியை திருவனந்தபுரம் தம்பானூர் பகுதியிலிருந்தும் கைப்பற்றினர்.

வில்சனை சுட்டுக் கொல்ல பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல்!

இன்று கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மூன்று மாநில காவல் துறையினரும் நாகர்கோவில் நேசமணி நகர் வந்து இவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் முக்கிய ஆதாரங்கள் சிக்கிய நிலையில் கொலையாளிகள் இருவரும் வில்சனை கொலை செய்தது எப்படி? என்பதை நடித்துக் காட்டி உட்படுத்தப்பட்டுள்ளனர்.

எஸ்.ஐ. வில்சனை கொலைசெய்தது குறித்து நடித்துக்காட்டிய கொலையாளிகள்

இதற்காக இருவரையும் இன்று பிற்பகல் காவல் துறையினர் களியக்காவிளை அழைத்துச் சென்று மார்க்கெட் ரோடு சோதனைச்சாவடிக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினார். அப்போது இருவரும் எப்படி வில்சனை சுட்டோம், கத்தியால் குத்தினோம், எந்த வழியாக வந்தோம், எங்கு ஒடினோம் என அவர்களிடம் நடித்துக்காட்டினர். இதை வைத்து காவல் துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர்.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்த எஸ்எஸ்ஐ வில்சன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அழைத்துச்சென்று 2 பயங்கரவாதிகளிடம் விசாரணை. கொலை செய்தது எப்படி என இருவரும் நடித்து காட்டினர்.Body:களியக்காவிளை சோதனைச்சாவடியில் காவல் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கடந்த 8-ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். வில்சனை சுட்டுக் கொன்றதாக அப்துல் சமீம், தவுபீக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பயங்கரவாத செயல்களில் தொடர்புடைய இருவரையும் போலீசார் 10 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.
கடந்த 2 நாட்களில் வில்சன் கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் கத்தி போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. துப்பாக்கியை எர்ணாகுளம் கழிவுநீர் ஓடையில் இருந்தும், கத்தியை திருவனந்தபுரம் தம்பானூர் பகுதியில் இருந்தும் கைப்பற்றினர்.
இன்று கேரளா ,தமிழ்நாடு கர்நாடகா ஆகிய மூன்று மாநில போலீசாரும் நாகர்கோவில் நேசமணி நகர் வந்து இவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் முக்கிய ஆதாரங்கள் சிக்கிய நிலையில் கொலையாளிகள் இருவரும் வில்சனை கொலை செய்தது எப்படி? என்பதை நடித்துக் காட்டி உள்ளனர்.
இதற்காக இருவரையும் இன்று பிற்பகல் போலீசார் களியக்காவிளை அழைத்துச் சென்று மார்க்கெட் ரோடு சோதனை சாவடிக்கு கொண்டு சென்று போலீசார் விசாரணை நடத்தினார்.
அப்போது இருவரும் எப்படி வில்சனை சுட்டோம், கத்தியால் குத்தினோம் எந்த வழியாக வந்தோம் எங்கு ஒடினோம் என போலீசாரிடம் நடித்துகாட்டினர். போலீசார் இருவரையும் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.