ETV Bharat / jagte-raho

அங்கோடா லொக்கா யார்? மரணத்தில் இருக்கும் சந்தேகம் என்ன? வழக்கின் போக்கு... - srilankan gangster lokka story

இலங்கையில் நிழல் உலக தாதாவாக அங்கோடா லொக்காவின் சடலம் தமிழ்நாட்டில் எரிக்கப்பட்டது. சந்தேகத்தின் பேரில் விசாரணையைத் தொடங்கிய காவல் துறையினருக்கு பல அடுக்கடுக்கான தகவல்கள் கிடைத்தன. அவர் மரணத்தில் உள்ள சந்தேக முடிச்சுகளை ஆராய்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

srilankan gangster lokka story
srilankan gangster lokka story
author img

By

Published : Aug 7, 2020, 8:47 PM IST

கோயம்புத்தூர்: நிழல் உலக தாதாவாக இருந்த அங்கோடா லொக்கா மரணத்தின் சந்தேகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அங்கோடா லொக்கா இலங்கையில் நிழல் உலக தாதாவாக இருந்துள்ளார். இவரின் பெயர் மதுமகே லசந்தா சந்தனா பெராரா (Maddumage Lasantha Chandana Perera). அங்கோடா லொக்கா என்பது இவரது புனை பெயராக இருந்துள்ளது. இலங்கையில் இவர் மீது கொலை வழக்குகள் உள்ளன. இப்படிப்பட்ட தாதா கடந்த 2017ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்துள்ளார். பின் பெங்களூருவில் தங்கி இருந்துள்ளார்.

அங்கோடா லொக்கா
அங்கோடா லொக்கா

அதன்பின் 2017ஆம் ஆண்டில் மதுரையிலும் வசித்துள்ளார். அதன்பின் 2018ஆம் ஆண்டு கோவைக்கு வந்த லொக்கா, சரவணம்பட்டி பகுதியில் தங்கி இருந்துள்ளார். அதன்பின் 2019ஆம் ஆண்டு சேரன் மாநகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்துள்ளார். இந்தியாவில் பிரதீப் சிங் என்று போலி பெயரில் வசித்து வந்துள்ளார்.

அங்கோடா லொக்கா-இலங்கை தாதா
அமானி தான்ஜி- லொக்காவுடன் கோவையில் வசித்து வந்தவர்
சிவகாமசுந்தரி- வழக்குரைஞர் (மதுரை)
தியானேஸ்வரன்- லொக்காவிற்கு உதவியவர்(ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் திருப்பூரில் தங்கி இருந்தவர்)

அமானி தான்ஜி: இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர். அங்கோடா இலங்கையில் இருக்கும் போது சிலரை கொலை செய்துள்ளார். அப்படி கொலை செய்யப்பட்ட ஒருவரின் மனைவி தான் அமானி தான்ஜி. அதன்பின் அங்கோடா லொக்காவோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் லொக்காவை காண அவ்வப்போது இலங்கையில் இருந்து கோவைக்கு வருவது வழக்கம்.

அங்கோடா லொக்கா
அங்கோடா லொக்கா

அப்படி பிப்ரவரி மாதம் அங்கோடா லொக்காவை காண கோவைக்கு வந்துவிட்டு இலங்கை செல்லலாம் என்று திரும்பிய போது இங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அவர் இங்கேயே இருக்கும் நிலை ஏற்பட்டது. எனவே கடந்த பிப்ரவரி மாதம் முதல் அங்கோடா லொக்காவுடன் கோவையிலேயே தங்கி விட்டார்.

சிவகாமசுந்தரி: மதுரையில் வழக்குரைஞராக இருக்கிறார். இவரின் தந்தை இலங்கையில் அமைப்பில் பற்றுள்ளவர் என்று கூறப்படுகிறது. இவர் மீது மதுரை காவல் துறையினர் வழக்கு பதிவும் செய்துள்ளனர். சிவகாமசுந்தரியின் 7 வங்கி கணக்குகளுக்கு 2017க்கு முன்பிருந்தே வெளி நாடுகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சுமார் ஒரு கோடி ரூபாய் பணம் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

அங்கோடா லொக்காஅங்கோடா லொக்கா
அங்கோடா லொக்காஅங்கோடா லொக்கா

தியானேஸ்வரன்: ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். திருப்பூரில் சகோதரி வீட்டில் வசித்துள்ளார். அங்கோடா லொக்காவிற்கு போலி ஆவணங்கள் தயாரிப்பது வாடகைக்கு வீடு எடுத்து தருவது என அனைத்திற்கும் உதவியதாக கூறப்படுகிறது.

ஜூலை 3ஆம் தேதியன்று இரவு சுமார் 10 மணியளவில் லொக்காவும் அமானியும் கோவையில் வீட்டில் இருந்தபோது லொக்காவிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. லொக்காவை அமானி தான்ஜி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் செல்லும் வழியிலேயே இறந்து விட்டதாகக் கூறி கோவை அரசு மருத்துவமனைக்கு போகும்படி தனியார் மருத்துவமனையில் கூறிவிட்டனர்.

எனவே, அமானி தான்ஜி கோவை அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். வரும் போது மதுரையில் உள்ள சிவகாமசுந்தரி மற்றும் தியானேஸ்வரனிடம் கைபேசி மூலம் இந்த காரியத்தைக் கூறியுள்ளார். ஜூலை 4ஆம் தேதி சிவகாமசுந்தரி மற்றும் தியானேஸ்வரன் வந்துள்ளனர். சிவகாமசுந்தரி மதுரையில் இருந்து வரும் போது அவருடன் சிலரும் வந்துள்ளனர். ஜூலை 4ஆம் தேதி கோவைக்கு வந்த தியானேஸ்வரன், சிவகாமசுந்தரி மற்றும் சிவகாமசுந்தரியுடன் வந்தவர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

அங்கோடா லொக்கா
அங்கோடா லொக்கா

மருத்துவமனையில் லொக்காவை, பிரதீப் சிங் என்றும் தனது சகோதரர்கள் என்றும் சிவகாமசுந்தரி கூறியுள்ளார். ஆனால் இவரின் மரணத்தில் சிறுது சந்தேகம் இருந்ததால் மருத்துவமனை தரப்பிலிருந்து காவல் துறையினரிடன் வழக்கு ஒன்று பதிவுசெய்து கொள்ளுமாறு கூறியுள்ளனர். எனவே லொக்கா வசித்து வந்த பகுதி பீளமேடு காவல் எல்லைக்குட்பட்டது என்பதால் பீளமேடு காவல் நிலையத்தில் இறந்தவர் பெயர் பிரதீப் சிங் என்றும் தனது பெரியப்பா மகன் என்றும் அமானி தான்ஜி பிரதீப் சிங்கின் காதலி என்றும் இவர் இறந்ததில் சந்தேகம் உள்ளதென்றும் சிவகாமசுந்தரி புகார் அளித்துள்ளார்.

காவல்துறையினரும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்பின் ஜூலை 5ஆம் தேதி காலையில் கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்து உடலை இவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். உடலை சிவகாமசுந்தரியுடன் வந்திருந்த ராஜா என்பவர் கையொப்பமிட்டு பெற்று கொண்டுள்ளார். அதன்பின் உடலை மதுரைக்கு எடுத்து சென்று தகனம் செய்துள்ளனர்.

அங்கோடா லொக்கா
அங்கோடா லொக்கா

ஜூலை 23ஆம் தேதி இலங்கையில் செய்தி ஊடகங்களில் தேடப்பட்டு வந்த அங்கோடா லொக்கா என்ற தாதா கோவையில் ஜூலை 3ஆம் தேதி இறந்து உடலை தகனம் செய்து விட்டதாக செய்திகள் வெளியாகின. இது கோவை காவல் துறைக்கு தெரியவந்ததையடுத்து காவல் துறையினர் விசாரணை நடத்த தொடங்கினர்.

ஆனால் கோவையில் ஜூலையில் 3ஆம் தேதி அதுபோன்று யாரும் இறந்து தகனம் செய்யப்படவில்லை என்று கூறப்பட்டது. மேலும் கோவை காவல் துறையினருக்கு அங்கோடா லொக்கா தனது பெயரை பிரதீப் சிங் என்று மாற்றி போலியான ஆவணங்களை கொண்டு கோவையில் வசித்து வந்ததும் உடற்பயிற்சி மையங்களுக்கு புரோட்டீன் பவுடர்களை சப்ளை செய்து வந்தவன் என்று தகவல் கிடைத்துள்ளன.

அங்கோடா லொக்கா
அங்கோடா லொக்கா

தகவலின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட காவல் துறையினர் ஜூலை 4ஆம் தேதி பீளமேடு காவல் நிலையத்தில் பிரதீப் சிங் என்ற பெயரில் மரணம் ஒன்று நிகழ்ந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. அதன்பின் பீளமேடு காவல் துறையினர் எஸ்.ஐ ஜோதியின் தலைமையில் புகாரளித்த சிவகாமசுந்தரியை தேட தொடங்கினர். ஆகஸ்ட் 2ஆம் தேதி சிவகாமசுந்தரியை கோவையில் பிடித்தனர். அவருடன் சேர்ந்து அமானி தான்ஜி யையும் பிடித்தனர்.

ஆனால் அப்போது அமானி தான்ஜி கர்ப்பிணியாக இருந்ததால் அவரை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிவகாமசுந்தரியை பீளமேடு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிவகாமசுந்தரி மதுரையில் வழக்குரைஞர் என்றும் அங்கோடா லொக்கா தான் பிரதீப் சிங் என்றும் போலியான பெயரில் இங்கு வசித்து வந்ததும், இதற்கு சிவகாமசுந்தரி உதவுயுள்ளார் என்றும் அதுமட்டுமின்றி லொக்காவில் போலி ஆவணங்களை தயாரிக்க உதவியவர் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தியானேஸ்வரன் என்றும் திருப்பூரில் வசித்து வருபவர் என்றும் தெரியவந்தது.

அங்கோடா லொக்கா
அங்கோடா லொக்கா

இதை தொடர்ந்து சிவகாமசுந்தரி சிறையில் அடைக்கப்பட்டார். மறுநாள் ஆகஸ்ட் 3ஆம் தேதி பீளமேடு காவல் துறையினர் திருப்பூர் சென்று தியானேஸ்வரனை கைதுசெய்து கோவைக்கு அழைத்து வந்து சிறையிலடைத்தனர். அதே சமயம் மருத்துவமனையில் கர்ப்பிணியாக சேர்க்கப்பட்டிருந்த அமானி தான்ஜிக்கு கருகலைப்பு ஏற்பட்டது. ஆகஸ்ட் 3ஆம் தேதி மாலையே இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றபட்டது. இதில் ஐ.ஜி சங்கர் தலைமை ஏற்றார். ஆகஸ்ட் 4ஆம் தேதி சிபிசிஐடி ஐ.ஜி சங்கர் தலைமையில் கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஐ.ஜி சங்கர் இந்த வழக்கை விசாரிக்க 7 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் சிபிசிஐடி டி.எஸ்.பி ராஜு தலைமையில் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இறந்தது லொக்கா தானா? என்று உறுதியாக தெரியாததால் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்படும். அதன் முடிவிலேயே இறந்தது அங்கோடா லொக்காவா? என்று தெரிய வரும் என்று தெரிவித்தார். அன்று மாலையே டி.எஸ்.பி ராஜு தலைமையிலான 10 பேர் கொண்ட குழு சேரன் மாநகரில் லொக்கா தங்கியிருந்த வீட்டை ஆய்வு செய்து அங்கிருந்து புரோட்டீன் பவுடர்களை பறிமுதல் செய்து அதனை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

அங்கோடா லொக்கா
அங்கோடா லொக்கா

அன்று இரவே லொக்காவின் உடற்கூறாய்வு முடிந்து உடலை பெற்றுக் கொள்ளும் சீட்டும் மதுரையில் தகனம் செய்த சீட்டும் கிடைத்தன. அதில் ஜூலை 5ஆம் தேதி உடற்கூறாய்வு செய்து அதை ராஜா என்பவர் பெற்று கொண்டதும் மதுரையில் தகனம் செய்தது குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்பின் ஆகஸ்ட் 5ஆம் தேதி லொக்காவின் உடலை உடற்கூறாய்வு செய்யும் போது எடுத்து வைக்கப்பட்டிருக்கும் உடல் உறுப்புகளை டி.என்.ஏ சோதனை செய்ய முடிவெடுத்தனர்.

அதன் தொடர்ச்சியாக ஆக்ஸ்ட் 6ஆம் தேதி லொக்காவின் கல்லீரல், சிறுகுடல், இறைப்பை ஆகிய பாகங்களை சென்னைக்கு ஒரு குழு ஆய்விற்கு எடுத்து சென்றது. இலங்கையில் இருக்கும் அவரது உறவினர்களிடம் இருந்தும் மாதிரிகளை பெற்று டி.என்.ஏ பரிசோதனை செய்து ஒப்பிட்டி பார்க்க முடுவு செய்யப்பட்டது. அதே சமயம் மதுரைக்கு ஒரு குழு சென்றுள்ளது. மதுரையில் அங்குள்ள காவல் துறையினரிடம் கலந்தாய்வு மேற்கொள்கின்றனர். அதுமட்டுமின்றி இந்திய உளவு பிரிவான (ரா-RAW) புலனாய்வு குழு சிபிசிஐடி உடன் கலந்தாய்வு செய்தனர். அதில் சிவகாமசுந்தரிக்கு 7 வங்கி கணக்குகள் இருந்ததும் அதில் சுமார் ஒரு கோடி ரூபாய் பணம் கொஞ்சம் கொஞ்சமாக போடப்பட்டிருப்பதும் தெரியவந்ததுள்ளது.

எனவே சிவகாமசுந்தரியின் வங்கி கணக்குகளை சிபிசிஐடி-யினர் ஆய்வு செய்து வருகின்றனர். டி.என்.ஏ ஆய்வு முடிவுகள் போன்றவற்றை விரைந்து தரவும் பரிந்துரை செய்துள்ளனர். லொக்கா தங்கியிருந்த வீட்டின் அருகில் இருப்பவர்களிடம் கேட்கையில், அவர் பெயர் அங்கோடா லொக்கா என்று இதுவரை தெரியாது. ஊடகங்களில் செய்தி வெளிவந்த பின்பு தான் பெயரே தெரியும். லொக்கா வீட்டில் இருந்து எப்போதாவது வருவார், பார்ப்பதற்கு திட காத்திரமான உடலுடன், நகைகளை போட்டு கொண்டு தான் வெளியில் வருவார், அசைவ உணவினை விரும்பி உணவகத்தில் வாங்கி செல்வார் என்று கூறினர்.

சிபிசிஐடி யின் சந்தேகங்கள்:

  1. அங்கோடா லொக்கா விஷம் தரப்பட்டு கொள்ளப்பட்டாரா?
  2. கணவரை கொன்றதால பலி வாங்க அமானி தான்ஜி லொக்காவுடனேயே இருந்து விஷம்(slow poison) தந்துள்ளாரா?
  3. சிவகாமசுந்தரி மற்றும் தியானேஸ்வரனை அங்கோடா லொக்கா எப்படி தொடர்பு கொண்டான்?
  4. சிவகாமசுந்தரி வங்கிக்கு யார் இவ்வளவு பணம் போட்டது?
  5. தியானேஸ்வரன் ஏன் இவர்களுக்கு உதவிட வேண்டும்?
  6. இறந்தது அங்கோடா லொக்கா தானா?
  7. லொக்காவிற்கு இந்தியாவில் வேறு ஏதேனும் நபர்களின் தொடர்பு உள்ளதா?
  8. வீட்டில் கைபற்றப்பட்ட பவுடர்கள் எப்படி லொக்காவிற்கு கிடைத்திருக்கும்?

என்று பல்வேறு கேள்விகள் இருக்கின்றன. இதனை எல்லாம் இவர்கள் மூவரிடமும் விசாரித்த பிறகே ஒரு முடிவு கிடைக்கும் என்று ஐ.ஜி தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.