வளசரவாக்கம் பகுதியில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்ற போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர், அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த 4 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர். அவர்களிடமிருந்த துணிப் பையையும் அவர்கள் சோதனையிட்டனர்.
அப்போது அதில் 5 கிலோ மெத்தம்பெட்டமைன் (Methamphetamine) போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், போதைப் பொருளை கடத்த முயன்ற சிவரூபன் பரமானந்தன் (45), அலெக்சாண்டர் போலிகாப் ( 36), புழலைச் சேர்ந்த கோபால் மணி (39) மற்றும் சுஜந்தன் சொக்கலிங்கம்( 39) ஆகியோரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: புழல் அருகே வியாபாரியை வெட்டி ரூ. 20ஆயிரம் வழிப்பறி!