ETV Bharat / jagte-raho

கடையில் எதிர்பார்த்த பணம் இல்லை: பழங்களைத் திருடிய திருடன்!

சங்கரன்கோவில் அருகே லுங்கியால் முகத்தை மறைத்து பழக்கடையில் திருடச் சென்ற இளைஞர், இரண்டாயிரத்திற்கும் மேல் பணம் இல்லாததால், பழங்களையும் சேர்த்து திருடிச் சென்ற கண்காணிப்புப் படக்கருவின் பதிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

tenkasi crime
tenkasi crime
author img

By

Published : Oct 2, 2020, 7:04 AM IST

தென்காசி: பழக்கடையில் திருடச்சென்றவர் பணம் குறைவாக இருந்ததால் பழங்களையும் சேர்த்து திருடிச்சென்ற கண்காணிப்புப் படக்கருவியின் காட்சிகள் வெளியாகியுள்ளன.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள கீழ அழகு நச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் கார்த்திக். இவர் பல்வேறு திருட்டு வழக்கில் கைதாகி சிறை சென்றவர் எனக் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு (செப். 30) சங்கரன்கோவில்- கழகுமலை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது ரோந்துப் பணியில் இருந்த காவலர்கள் கார்த்திக்கைப் பிடித்து விசாரணை செய்தனர்.

அப்போது முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால், சந்தேகமடைந்த காவலர்கள், கடுமையாக விசாரித்துள்ளனர். விசாரணையில், சங்கரன்கோவில் பேருந்து நிலையத்திலுள்ள ஆறுமுகமூர்த்திக்குச் சொந்தமான பழக்கடையில் தற்போதுதான் திருடிவிட்டு வருகிறேன் என ஒத்துக்கொண்டார்.

கடையில் எதிர்பார்த்த பணம் இல்லை; பழங்களை திருடிய திருடன்!

இது தொடர்பாக கடையில் கண்காணிப்புப் படக்கருவியின் பதிவுகளைச் சோதித்ததில், 2000 ரூபாய் பணத்தையும், பழங்களையும் திருடிச்சென்றது தெரியவந்தது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.