கன்னியாகுமரி அடுத்த திருவரம்பு பகுதியைச் சேர்ந்தவர் கண்மணி. இவர் இப்பகுதியில் ரப்பர் ஷீட் விற்பனை செய்யும் கடையை நடத்திவருகிறார். இந்நிலையில், கண்மணி மதிய உணவுக்காக வெளியே சென்றுள்ளார்.
அப்போது அந்த வழியாக வந்த இளைஞர் கடையின் முன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி அக்கம் பக்கத்தில் நோட்டமிட்டு, பின்னர் சாலையில் யாரும் இல்லாத சமயம் பார்த்து ஷட்டரை திறந்து கடையினுள் நுழைந்தார். இதனையடுத்து கடையின் கல்லாப் பெட்டியில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தை திருடி சென்றுவிட்டார்.
![Theft CCTV footage in kanniyakumari சிசிடிவியில் பதிவான திருட்டு காட்சிகள் இணையத்தில் வைரல்! கன்னியாகுமரி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4246442_kanniyakumari-11-1.bmp)
கடைக்கு திரும்பிய கண்மணி, கல்லாப் பெட்டியில் இருந்த ஒரு லட்சம் பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து சிசிடிவி காட்சியை பார்த்தபோது இளைஞர் ஒருவர் பணத்தை திருடியது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இளைஞர் பைக்கில் வந்து நோட்டமிட்ட பின்னர் கடைக்குள் புகுந்து பணத்தை திருடி செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.