சென்னை கொருக்குப்பேட்டை ஜே.ஜே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் 11 வயது சிறுமி. இவர், அங்குள்ள மளிகைக் கடைக்குச் சென்றுள்ளார். திரும்பி வரும்போது, அதே பகுதியைச் சேர்ந்த குமாரசாமி (63) என்பவர் சிறுமியை பாலியல் ரீதியாகத் தீண்டியதால், சிறுமி அழுதுகொண்டே வந்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் குமாரசாமியை கைதுசெய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையில் சமூக நல அலுவலராகப் பணியாற்றி ஓய்வுபெற்றதும், இவர் அப்பகுதியில் உள்ள சிறுமிகளுக்குப் பாலியல் சீண்டல் தொல்லை கொடுப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து குமாரசாமியை போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்த காவல் துறையினர், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதனையும் படிங்க : செல்போன் திருடிய நபர் - சிசிடிவி காட்சி மூலம் பிடித்த காவல் துறையினர்