ETV Bharat / jagte-raho

இரவு நேரம்... ஃபாலோ செய்த  7 பேர்... பைக்கில் சென்றவரிடம் ரூ.17 லட்சம் பறிப்பு

சென்னை: இருசக்கர வாகனத்தில் சென்ற நபரைத் தாக்கி 7 பேர் கொண்ட கும்பல் 17 லட்சம் ரூபாயை பறித்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

stationஇருசக்கர வாகனத்தில் சென்றவரைத் தாக்கி 17 லட்சத்தைப் பறித்துச்சென்ற மர்மக் கும்பல்
stationஇருசக்கர வாகனத்தில் சென்றவரைத் தாக்கி 17 லட்சத்தைப் பறித்துச்சென்ற மர்மக் கும்பல்
author img

By

Published : Dec 13, 2019, 4:45 PM IST

சென்னை எம்.கே.பி நகர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அபுபக்கர் சித்திக் (36). இவர் நேற்று இரவு பணப் பரிமாற்ற அலுவலகத்திலிருந்து சுமார் 17 லட்சத்து 91 ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு திருவல்லிக்கேணியில் உள்ள தனது முதலாளியான முகமது அனீஸ் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் தனது நண்பருடன் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, 3 இரு சக்கர வாகனங்களில் முகமது அபுபக்கரைப் பின்தொடர்ந்து வந்த 7 மர்ம நபர்கள் திடீரென இருவரையும் தலைக்கவசத்தால் தாக்கிவிட்டு பணத்தைப் பறித்துச் சென்றனர். இந்நிகழ்வு தொடர்பாக வடக்குக் கடற்கரை காவல் நிலையத்தில் முகமது அபுபக்கர் புகாரளித்தார்.

இந்நிலையில், கலெக்டர் அலுவலகம் அருகே ஜூஸ் கடை நடத்தி வரும் தர்மதுரை என்பவர், இரவு தன் கடையை மூடிவிட்டு செல்லும் போது ஐசிஐசிஐ வங்கி அருகே பணப்பை இருந்ததாகக் கூறி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர், முகமது அபுபக்கரை வரவழைத்து அந்தப் பையை திறந்து பார்க்கும்போது அதில் 8 லட்சம் இருந்தது. மேலும், சந்தேகத்தின்பேரில் காவல் துறையினர் தர்ம துரையை விசாரித்ததில் தனது வீட்டில் 7 லட்சத்து 90ஆயிரம் ரூபாய் வைத்திருப்பதை ஒப்புக்கொண்டார். மீதி பணத்தை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் எடுத்துச் சென்றுவிட்டதாகவும் கூறினார்.

அதனடிப்படையில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சதீஷ் குமார், லோகேஷ், சுகுமார் ஆகியோரிடம் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் கும்பல்தான் வழிப்பறியில் ஈடுபட்டதா அல்லது பையில் இருந்த பணத்தை மட்டும் திருடிச் சென்றனரா என்னும் கோணத்தில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

வடக்குக் கடற்கரை காவல் நிலையம்

இதையும் படிங்க: பெண் வேடமிட்டு பொதுமக்களிடம் பணம் பறித்த இளைஞர் கைது!

Intro:Body:இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை 7பேர் கொண்ட கும்பல் தாக்கி 17 லட்சம் பறிப்பு.போலிசுக்கு பயந்து கொள்ளையடித்த பணம் ஒப்படைப்பா என்ற கோணத்தில் விசாரணை..

சென்னை எம்.கே.பி நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது அபுபக்கர் சித்திக்(36).இவர் நேற்று இரவு இரண்டாவது கடற்கரையில் உள்ள பணபரிமாற்றம் அலுவலகத்திலிருந்து சுமார் 17 லட்சத்து 91 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு திருவல்லிக்கேணியில் தனது முதலாளியான முகமது அனீஸ் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் தனது நண்பருடன் சென்று கொண்டிருந்தார்.

அப்போது 3 இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த 7மர்ம நபர்கள் ஐசிசிஐ வங்கி அருகே இருவரையும் ஹெல்மெட்டால் தாக்கிவிட்டு 17 லட்சத்து 91ஆயிரம் ரூபாயை பறித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக முகமது அபுபக்கர் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இது தொடர்பாக அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து போலிசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் இரவு 10மணியளவில் தர்மதுரை என்பவர் கலெக்டர் அலுவலகம் அருகே ஜூஸ் கடை நடத்தி வருபவர்.இவர் கடையை மூடிவிட்டு செல்லும் போது ஐசிஐசிஐ வங்கி அருகே பணப்பை இருந்ததாக கூறி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.பின்னர் முகமது அபுபக்கரை வரவழைத்து அந்த பையை திறந்து பார்க்கும்போது 8லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது.மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் போலிசார் தர்மதுரையை விசாரணை செய்ததில் தனது வீட்டில் 7லட்சத்து 90ஆயிரம் இருப்பதாக விசாரணையில் தெரியவந்தது.பின்னர் மீதி பணம் பற்றி விசாரிக்கும் போது உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் எடுத்து சென்றதாக கூறினார். இவர் வாக்குமூலத்தின் அடிப்படையில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சதீஷ் குமார்,லோகேஷ்,சுகுமார் ஆகியோரிடம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் இந்த கும்பல் தான் வழிப்பறியில் ஈடுப்பட்டதா அல்லது பையில் இருந்த பணத்தை திருடி சென்றனரா என்ற கோணத்தில் போலிசார் விசாரித்து வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.