வடோதரா (குஜராத்): அதிகாலை நடந்த கோர சாலை விபத்தில் குழந்தை உள்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும், படுகாயமடைந்த 16 பேர் வடோதராவில் உள்ள எஸ்.எஸ்.ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சூரத்திலிருந்து பாவகத் வழிபாட்டுத் தலத்திற்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற வாகனம், வடோதராவின் வாகோடியா கிராசிங் அருகே ஒரு சரக்கு வாகனத்தின் மீது மோதி இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, “உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன். மாவட்ட நிர்வாகம் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.