ETV Bharat / jagte-raho

மாணவிகளை கேலி செய்த 8 பேர் கைது - schoolstudent

தருமபுரி: அரசு மகளிர் பள்ளி மாணவிகளை கேலி செய்த வாலிபர்களை மாறுவேடத்தில் கவனித்து காவல்துறையினர் கைது செய்தனர்.

மாணவிகளை கேலி செய்த 8 பேர் கைது - காவல்துறையினர் அதிரடி!
author img

By

Published : Jul 12, 2019, 8:23 PM IST

தருமபுரி பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள ஔவையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவியர் பயின்று வருகின்றனர். பள்ளி மாணவிகள் காலை பள்ளிக்குச் செல்லும்போதும், மாலையில் வீட்டுக்கு திரும்பும்போதும் இளைஞர்கள் கேலி கிண்டல் செய்வதும் சில இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து தருமபுரி நகர காவல் நிலைய காவல் ஆய்வாளர் ரத்தினகுமார் தலைமையிலான காவல் துறையினர் மாறுவேடத்தில் கண்காணித்தனர். பள்ளி மாணவிகளை கிண்டல் செய்தும் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று சாகசம் செய்தது என 11 பேரை காவல் துறையினர் பிடித்து தருமபுரி நகர காவல் நிலையத்தில் விசாரணை செய்தனர். இதில் மூவரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். எட்டு வாலிபர்களை கைது செய்தனர்.

இளைஞர்கள் அதிவேகமாக வாகனம் ஓட்டி பள்ளி மாணவிகள் மீது வாகனத்தை மோதியதால் 3 மாணவிகள் காயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Intro:tn_dpi_01_schoolstudent_raking_8arrest_vis_7204444

Body:tn_dpi_01_schoolstudent_raking_8arrest_vis_7204444

Conclusion:

தர்மபுரி அருகே மகளிர் பள்ளி மாணவிகளை கேலி கிண்டல் செய்த வாலிபர்கள் கைது. தர்மபுரி பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட  மாணவியர் பயின்று வருகின்றனர்.பள்ளி மாணவிகள் காலை பள்ளிக்குச் செல்லும் போதும் மாலையில் பள்ளி விட்டு வீட்டுக்கு திரும்பும் போதும் இளைஞர்கள் பள்ளி மாணவிகளை கேலி கிண்டல் செய்வதும் சில மாணவர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதும் ஆக இருந்தனர்.இதனைத் தொடர்ந்து தர்மபுரி நகர காவல் நிலைய காவல் ஆய்வாளர் ரத்தினகுமார் தலைமையிலான போலீசார் மாறுவேடத்தில் கண்காணித்தனர். போலீசாரின் கண்காணிப்பில் இன்று பள்ளி மாணவிகளை கிண்டல் செய்தும் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று சாகசம் செய்தது என 11 பேரை காவல்துறையினர் பிடித்து தர்மபுரி நகர காவல் நிலையத்தில் விசாரணை செய்தனர் இதில் மூவரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். பிரசாந்த் பசுபதி செந்தில் அஜித் உள்ளிட்ட எட்டு வாலிபர்களை  கைது செய்தனர்.கடந்த 3 நாட்களுக்கு முன் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முன்பாக இளைஞர்கள் அதிவேகமாக வாகனம் ஓட்டி பள்ளி மாணவிகள் மீது வாகனத்தை மோதியதால் 3 மாணவிகள் காயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.