ETV Bharat / jagte-raho

தர்மபுரியில் பள்ளி மாணவி கடத்தல் : காவல் துறையினர் விசாரணை

தர்மபுரி : பாலக்கோடு அருகே 12ஆம் வகுப்பு பள்ளி மாணவி கடத்தப்பட்டது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தர்மபுரியில் பள்ளி மாணவி கடத்தல்: காவல் துறை விசாரணை!

author img

By

Published : Dec 23, 2020, 11:22 AM IST

தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உள்ள செங்கண் பசவன் தலாவ் கிராமத்தைச் சேர்ந்த 17வயது சிறுமி பள்ளி விடுமுறை காரணமாக மாரண்டஅள்ளி அருகே உள்ள சிக்க மாரண்ட அள்ளிப் புதூரில் உள்ள தனது பாட்டி வீட்டியில் இருந்து வந்துள்ளார்.

கடந்த 19ஆம் தேதி இரவு 10 மணி அளவில் இயற்கை உபாதை கழிக்க வெளியே சென்ற அவர் அதன்பின் வீடு திரும்பவில்லை. தொடர்ந்து, எங்கு தேடியும் அம்மாணவி கிடைக்கவில்லை. தொடர்ந்து விசாரித்ததில், செங்கண் பசுவன் தலாவ் பகுதியைச் சேர்ந்த சின்னண்ணன் மகன் சந்தோஷ் (17) என்பவர்தான் அவரைக் கடத்தியதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து தனது மகளை மீட்டுத் தரும்படி திம்மப்பன் மாரண்டஅள்ளி காவல் நிலைத்தியத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக மாரண்டஅள்ளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மாணவியைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க...கேட்பாரற்று கிடக்கும் வரலாற்றுச் சின்னமான ‘ஆயி மண்டபம்’ : கண்டுக்கொள்ளுமா அரசு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.