ETV Bharat / jagte-raho

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை - விசைத்தறி உரிமையாளருக்கு 8 ஆண்டு சிறை! - பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை

ஈரோடு: 11ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் விசைத்தறி உரிமையாளருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

விசைத்தறி உரிமையாளருக்கு 8 ஆண்டு சிறை
author img

By

Published : Sep 19, 2019, 8:08 AM IST

ஈரோடு மாவட்டம் உப்பிலிபாளையம் சாலை மணிமலை பகுதியைச் சேர்ந்த குருசாமி மகன் சந்துரு(38). இவர் வீட்டிற்கு அருகிலேயே விசைத்தறி பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, பள்ளி விடுமுறையில் சென்னிமலைப் பகுதியில் உள்ள தாத்தா வீட்டிற்கு வந்து தங்கி உள்ளார்.

அப்போது சந்துரு சிறுமியிடம் பழகி உள்ளார். இந்த பழக்கத்தின் மூலம் 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1ஆம் தேதி சிறுமியை ஆசை வார்த்தை கூறி, விசைத்தறி பட்டறைக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி ஈரோடு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சந்துரு மீது போக்சோ, வன்கொடுமைத் தடுப்பு சட்டம் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை - விசைத்தறி உரிமையாளருக்கு 8 ஆண்டு சிறை

இந்த வழக்கின் விசாரணை ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், வழக்கின் இறுதி விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி மாலதி தீர்ப்பளித்தார். அதில் குற்றஞ்சாட்டப்பட்ட சந்துருவுக்கு, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.

Intro:ஈரோடு ஆனந்த்
செப்.18

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை -
விசைத்தறி உரிமையாளருக்கு 8ஆண்டு சிறை!

ஈரோட்டில் 11ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் விசைத்தறி உரிமையாளருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Body:ஈரோடு மாவட்டம் சென்னிமலை உப்பிலிபாளையம் ரோடு மணிமலை பகுதியை சேர்ந்த குருசாமி மகன் சந்துரு(38). திருமணம் ஆனவர். இவர் வீட்டிற்கு அருகிலேயே விசைத்தறி பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதியை சேர்ந்த அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவி, பள்ளி விடுமுறையில் சென்னிமலை பகுதியில் உள்ள தாத்தா வீட்டிற்கு வந்து தங்கி உள்ளார். அப்போது சந்துரு சிறுமியிடம் பழகி உள்ளார். இந்த பழக்கத்தின் மூலம் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் 1ம் தேதி சிறுமியை ஆசை வார்த்தை கூறி, விசைத்தறி பட்டறைக்குள் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் மற்றும் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி ஈரோடு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சந்துரு மீது போக்சோ, வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.

Conclusion:இந்த வழக்கின் விசாரணை ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், இன்று வழக்கின் இறுதி விசாரணை நடத்தி நீதிபதி மாலதி தீர்ப்பளித்தார். அதில் குற்றஞ்சாட்டப்பட்ட சந்துருக்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் மற்றும் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 8 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.