அண்மையில் பாஜகவில் இணைந்த ரவுடி கல்வெட்டு ரவியின் தம்பி அப்பு என்ற அன்பழகன், சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது ராயபுரம் மற்றும் புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையங்களில் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிணையில் வெளியே இருந்த அன்பழகன், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இதையடுத்து வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி தலைமையில் தனிப்படை அமைத்து அன்பழகனை காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில் தண்டையார்பேட்டையில் உள்ள தனது அம்மாவைப் பார்ப்பதற்காக அன்பழகன் வருவதாக புதுவண்ணாரப்பேட்டை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல்துறை ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையில் அங்கு விரைந்த காவல்துறையினர், ரவுடி அன்பழகனை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பின்னர், புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட ரவுடி அன்பழகன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: பூட்டிய வீட்டில் மிளகாய்ப் பொடி தூவி பணம், நகை கொள்ளை