ETV Bharat / jagte-raho

சொத்து வரிக்கு லஞ்சம்! - வருவாய் ஆய்வாளர் கைது! - revenue inspector arrested over bribe money

சென்னை: சொத்து வரிக்கு லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளர், புரோக்கர் ஆகியோரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

arrest
arrest
author img

By

Published : Jan 6, 2021, 5:54 PM IST

திருநின்றவூர் பிரகாஷ் நகரை சேர்ந்தவர் கலைச்செல்வி (45). சமூக ஆர்வலரான இவருக்கு ஆவடியை அடுத்த கோயில்பதாகை அண்ணா வீதியில் காலி மனை உள்ளது. இவர் தனது மனைக்கு சொத்துவரி செலுத்துவதற்காக ஆவடி நகராட்சி அலுவலகத்தில் உள்ள வருவாய் ஆய்வாளர் சத்தியமூர்த்தி (51) என்பவரை அணுகியுள்ளார்.

அப்போது, அவர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் வரி போட்டுத் தருவதாக கூறியுள்ளார். மேலும், பணத்தை புரோக்கர் வின்சென்ட் (30) என்பவரிடம் கொடுக்கும்படியும் கூறியுள்ளார். இதுகுறித்து கலைச்செல்வி, ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி சீனிவாசப்பெருமாளிடம் புகார் செய்தார்.

இதையடுத்து, கலைச்செல்வியிடம் ரசாயன பவுடர் தடவிய லஞ்சப் பணத்தை காவல்துறையினர் கொடுத்து அனுப்பியுள்ளனர். அதன்படி, நேற்று மாலை கலைச்செல்வி ஆவடி மாநகராட்சி அலுவலகம் சென்று புரோக்கர் வின்சென்டிடம் லஞ்சப் பணம் ரூ.5 ஆயிரத்தை கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் வின்சென்ட்டை பிடிக்க முயன்றனர். அப்போது, அவர் அங்கிருந்து தப்பி லஞ்சப் பணத்துடன் ஓட்டம் பிடித்தார்.

அவரை விடாது துரத்தி சுற்றி வளைத்த காவல்துறையினர், வின்சென்டை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர், அவரை வருவாய்த்துறை பிரிவுக்கு அழைத்து வந்து 15 மணி நேரம் விடிய, விடிய விசாரித்தனர். அதன் பின்னர் வருவாய் ஆய்வாளர் சத்தியமூர்த்தி, புரோக்கர் வின்சென்ட் ஆகிய இருவரை கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: சென்னையில் விசாரணைக்கு சென்று திரும்பிய வாலிபர் மர்ம மரணம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.