ஈரோடு முள்ளாம்பரப்பைச் சேர்ந்த செந்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கு ரிக் வண்டியில் பணிபுரிய தனியார் நிறுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில் முறையாக ஊதியம் வழங்காததால் செந்தில் ஊர் திரும்பப் போவதாகக் கூறி வந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி அவர் விபத்தில் உயிரிழந்ததாக ரிக் நிறுவனம் அளித்தது. இதனை ஏற்க மறுத்த குடும்பத்தினர் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் கூறினர்.
செந்தில் உடலை மீட்டு உடற்கூறாய்வு நடத்தக் கோரி அவரின் மனைவி தீபா இன்று ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார். நேற்று உடலை ஒப்படைப்பதாக தூதரகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை செந்தில் உடல் வந்து சேரவில்லை என்றும் அவர் புகார் தெரிவித்தார்.
இதையும் படியுங்க:
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி: மகனை மீட்டுத் தரக்கோரி மனு!