ETV Bharat / jagte-raho

19 மணி நேர தொடர் சோதனை: 3.25 கோடி ரொக்கம், 450 சவரன் தங்கம் பறிமுதல் - மாசு கட்டுப்பாடு வாரிய பொறியாளர்

ராணிப்பேட்டை: 19 மணி நேர தொடர் சோதனைக்குப் பிறகு மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் வீட்டிலிருந்து பல கோடி ரூபாய் பணம் பறிமுதல்செய்யப்பட்டது.

500 hundred
500 hundred
author img

By

Published : Oct 15, 2020, 10:43 AM IST

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவர் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் இணை முதன்மைச் சுற்றுச்சூழல் பொறியாளராகப் பணியாற்றிவருகிறார்.

ஒசூரு, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், வாணியம்பாடி, வேலூர் ஆகிய மாவட்டங்களின் அலுவலகம் இவரது கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டுவருகிறது.

மாதந்தோறும் மண்டல கூட்டம் காட்பாடியில் உள்ள மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் நடைபெறுவது வழக்கம். அதேபோன்று இந்த மாதத்திற்கான கூட்டம் நேற்று முன்தினம் (அக். 13) நடைபெற்றது.

இந்நிலையில், கோப்புகளைச் சரிபார்த்து அங்கீகரிக்க பன்னீர் செல்வம் லஞ்சம் பெறுவதாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் ஹேம சித்ரா தலைமையில் ஆய்வாளர்கள் விஜய், ரஜினிகாந்த், விஜயலட்சுமி ஆகியோர் நேற்று முன்தினம் (அக். 13) திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், லஞ்ச பண பரிமாற்றம், பேரம் பேசுவதற்காக காட்பாடியில் தனியாக அலுவலகம் ஒன்றை வாடகைக்கு எடுத்திருந்தது தெரியவந்தது.

இந்தத் திடீர் சோதனையில், 31 லட்சத்து 23 ஆயிரம் ரூபாயும், அவரது காரிலிருந்து இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என மொத்தமாக கணக்கில் வராத 33 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் காட்பாடியில் பறிமுதல்செய்யப்பட்டது.

பன்னீர் செல்வம்
பன்னீர் செல்வம்

நேற்று (அக். 14) காலை தொடங்கி இரவு வரை சுமார் 19 மணி நேரம் ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள அவரது இல்லத்திலும் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இதில் சுமார் 450 சவரன் தங்கம், 6.5 கிலோ வெள்ளி, மூன்று கோடியே 25 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஆகியவை திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அசையா சொத்துகள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

பன்னீர் செல்வம் மீது லஞ்சு ஒழிப்புத் துறை ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைப்பற்றப்பட்ட பொருள்கள் வேலூர் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இதையும் படிங்க: ஆற்றங்கரையில் கிடந்த மனித கால்: விசாரணையில் அதிர்ச்சித் தகவல் அம்பலம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.