கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள மார்க்கெட் சாலையில் அரசு மதுபானக்கடை ஒன்று உள்ளது. அந்த மதுபானக்கடை முன்பு ஆட்டோவில் முன் சீட்டில் உட்கார்ந்து ஒரு ஆணும், பின் சீட்டில் உட்கார்ந்து இருக்கும் பெண் ஒருவரும் பட்டப்பகலில் பீர் பாட்டில் வைத்து குடிக்கும் வாட்ஸ்அப் வீடியோ வைரலாக பரவியது.
![Pollachi Drinking Viral Video auto Driver Arrest](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4682175_polllachi-1-1.bmp)
சமூகத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் பொதுமக்களின் பாதுகாவலன் என்ற எண்ணம் மாறி, மினி ஆட்டோ பாராக மாறி இருப்பது மிகவும் வேதனையாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மேற்கு காவல் நிலைய காவல் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
அது வடுகபாளையத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் செல்வகுமார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, ஆட்டோவில் வந்த பெண் கெளசல்யா ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் என்பதும்; கணவரைப் பார்க்க வந்த போது கருத்து வேறுபாடு காரணமாக ஆட்டோவில் மது அருந்தியதும், புகை பிடித்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் பொது இடத்தில் மது, புகை பிடிக்க அனுமதித்த குற்றத்திற்காக காவல் துறையினர் ஆட்டோவை பறிமுதல் செய்து செல்வ குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.