புகழேந்தியின் நண்பரான ராஜேந்திரன் அளித்த வாக்குமூலத்தில், அவரும் புகழேந்தியும் கூட்டாக சிறுமியை பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக கூறியதன் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து நம்மிடம் பேசிய ஒரு விசாரணை அலுவலர், "சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த சாஹிதாபானு (22) இவரின் ஆண் நண்பராண மதன்குமாரின் கட்டாயத்தால் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
சாஹிதாவிற்கு உடல் நலம் சரியில்லாமல் போன நிலையில், தனது உறவினரின் மகளான 13 வயது சிறுமியை அழைத்து வந்து வீட்டு வேலைக்கு அமர்த்தியுள்ளார்.
மதனும் அவர் நண்பர்கள் சிலரும் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி, இதுகுறித்து தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.
சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் மேற்கொண்ட விசாரணையில், குற்றவாளிகளான மதன்(35), சாஹிதாபானு(22), சந்தியா(23), ஈஸ்வரி(18), கார்த்திக்(25), மகேஷ்வரி(29), வனிதா(35), பாலியல் தரகர்கள் செல்வி(50), விஜயா(45) என 8 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கடந்த 12ஆம் தேதி கைது செய்தோம்" என்றார்.
இந்த வழக்கில் பல முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பது விசாரணையின்போது தெரியவந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபர்களை கடந்த 16ஆம் தேதி போலீஸ் காவலில் எடுத்து காவல் துறையினர் விசாரித்தனர். அப்போது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த உதவிய பாலியல் தரகர்கள் முத்துப்பாண்டி, அன்சாரி பாஷா, அனிதா, மீனா, கார்த்திக் முஸ்தபா ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் விசாரணையின் போது சந்தியா, தனக்கு தெரிந்தவரான வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தகவல் அளித்தார்.
அதன் அடிப்படையில் ராஜேந்திரனை கைது செய்து விசாரித்தபோது தனது நண்பரான எண்ணூர் காவல் நிலைய ஆய்வாளர் புகழேந்தியின் தொடர்பு குறித்து தகவல்கள் வெளியாகின.
இருவரும் இணைந்து ராஜேந்திரனின் அலுவலகத்தில் வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: சவுகார்பேட்டை கொலை சம்பவத்தில் சிக்கியவர் தந்த அதிர்ச்சி தகவல்!