ETV Bharat / jagte-raho

ஐம்பொன் சிலை திருட்டு வழக்கில் ஒருவர் கைது! - சிலை திருட்டு வழக்கு

ஈரோட்டில் ஐம்பொன் சிலை திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த நபரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர். ஒரு அடி உயரமுள்ள ஐம்பொன் சிலை மீட்கப்பட்டது.

ஐம்பொன் சிலை திருட்டு வழக்கு, police arrested idol theft aquit, erode crime news, idol theft news, ஈரோடு கொள்ளை, சிலை திருட்டு வழக்கு, idol smuggling case
police arrested idol theft aquit
author img

By

Published : Jan 13, 2021, 11:43 AM IST

ஈரோடு: கோயில் ஐம்பொன் சிலை திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த நபரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ஶ்ரீ வெற்றி விநாயகர் கோயிலில் 2020 ஆகஸ்ட் மாதம் ஒரு அடி உயரமுள்ள 80ஆயிரம் மதிப்புள்ள உற்சவர் ஐம்பொன் முருகர் சிலை திருடப்பட்டது. இந்த வழக்கில் தேடப்பட்டுவந்த மோலப்பாளையத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் அவரிடமிருந்து ஒரு அடி உயரமுள்ள ஐம்பொன் சிலை மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்ட வெங்கடேஷிடம் விசாரணை நடத்திய காவல் துறையினர், பின்னர் அவரை சிறையிலடைத்தனர்.

இதே நபர் மீது, டிசம்பர் மாதம் நாடார் மேடு பகுதியிலுள்ள வீட்டில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு பவுன் தங்க நாணயம், மூன்றரை பவுன் தங்க மோதிரம் திருடப்பட்ட வழக்கும் நிலுவையிலிருந்தது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.