பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பசும்பலூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் நாராயணசாமி மகன் கலியமூர்த்தி. விவசாயியான இவர் இன்று தனது வீட்டை பூட்டிவிட்டு சாவியை வீட்டின் முன்பு இருந்த மீட்டர் பாக்ஸ் மீது வைத்துவிட்டு குடும்பத்தினருடன் வயலுக்கு சென்றுள்ளார்.
பின்னர், மீண்டும் மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீடு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்றுள்ளார். அங்கு வீட்டில் இருந்த பீரோ திறக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த கம்மல், செயின், வளையல் உள்ளிட்ட சுமார் 17 பவுன் மதிப்புள்ள தங்க நகை, ரூ. 65 ஆயிரம் ரொக்கம் பணம் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கலியமூர்த்தி வி.களத்தூர் காவல் துறையில் புகார் செய்தார். புகாரின் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர் மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருட்டு குறித்து வி.களத்தூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க...குட்கா முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சர் ரமணா உள்பட 30 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்