ETV Bharat / jagte-raho

காட்பாடி அருகே கோயில் உண்டியலைத் திருடியவருக்கு அடி உதை! - கோயில் உண்டியலை திருடிய இளைஞர்

வேலூர்: காட்பாடி அருகே வரதராஜ பெருமாள் கோயிலின் உண்டியலை உடைத்து இரண்டு லட்சம் ரூபாய் திருடிய நபரைப் பிடித்த மக்கள் அடி உதை கொடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

temple
temple
author img

By

Published : Oct 26, 2020, 3:59 PM IST

வேலூர் மாவட்டம் காட்பாடி தாராபடவேடு பகுதியில் உள்ள ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலயத்தில் இன்று (அக். 26) விடியற்காலை அடையாளம் தெரியாத ஒருவர் கோயிலில் உள்ள உண்டியலை உடைத்து பணத்தை திருடிக்கொண்டிருந்தார்.

இதனைக் கண்ட சிலர் அப்பகுதி மக்களின் உதவியோடு திருடிய நபரைப் பிடித்து கோயிலில் உள்ள தென்னை மரத்தில் கட்டிவைத்து அடித்து உதைத்தனர். பின்னர் காட்பாடி காவல் துறைக்குத் தகவல் கொடுத்து அந்த நபரை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக காட்பாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் உண்டியலை உடைத்து திருடிய நபர் வாலாஜாவைச் சேர்ந்த வீரா என்பதும், இவர் கோயில்களை நோட்டமிட்டு திருடிவருவதும் தெரியவந்தது. அவரிடமிருந்து கோயிலில் கொள்ளையடித்த சுமார் இரண்டு லட்சம் ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டது.

இதையும் படிங்க: அமைச்சர் துரைக்கண்ணு உடல் நிலை பின்னடைவு?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.