சென்னையை அடுத்த பொழிச்சலூர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திர குமார்(34). இவர் பம்மல் பகுதியிலுள்ள கடைக்கு சென்றுவிட்டு வெளிவந்தபோது வெளியே நிறுத்திவிட்டுச் சென்ற இருசக்கர வாகனத்தை யாரோ திருடிச் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேந்திர குமார் சங்கர் நகர் காவல் நிலையத்திற்குச் சென்று தனது இருசக்கர வாகனத்தை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார்.
அப்புகாரின் அடிப்படையில் விரைந்து வந்த காவல் துறையினர் கடையிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தபோது எதுவும் துப்பு துலங்காததால், இருச்சக்கர வாகனத்தை திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபரை காவல் துறையினர் வலைவீசி தேடி வந்தனர். இச்சூழலில் சங்கர் நகர் காவல் துறையினர் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி விசாரித்துள்ளனர்.
நிர்பயா வழக்கு: பவன் குப்தாவின் கருணை மனு நிராகரிப்பு!
அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால். வாகனத்தின் ஆவணத்தை சரிபார்க்க காவலர்கள் கேட்டபோது, இருவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். அவர்களை மடக்கிப் பிடித்த காவலர்கள், காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்தியாவை மீண்டும் துரத்தும் கொரோனா!
விசாரணையில் ஒருவர் திருநீர்மலையைச் சேர்ந்த சதீஷ்(28) என்பதும், மற்றொருவர் பம்மல் பகுதியைச் சேர்ந்த குணாநிதி(29) என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் பல இடங்களில் இருச்சக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்துவந்தது விசாரணையில் புலப்பட்டது. இதையடுத்து இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 2020 u/s 379 என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.