சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே கடந்த ஆறாம் தேதி மாநிலக் கல்லூரி மாணவர் நேரு என்பவரை, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடினர்.
இது தொடர்பாக சூளைமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து 11 பேரை தேடி வந்தனர். அதில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 8 பேரை கைது செய்த காவல் துறையினர் அவர்களை சிறையில் அடைத்தனர். மேலும், அந்த 8 பேர் மீது நடவடிக்கை எடுக்கும்படி பச்சையப்பன் கல்லூரி முதல்வர் அருள்மொழி செல்வனுக்கு சூளைமேடு காவல் துறையினர் பரிந்துரை செய்தனர்.
இதையடுத்து, மாநிலக் கல்லூரி மாணவரை கத்தியால் தாக்கி சிறையிலிருக்கும் மாணவர்கள் தாமோதரன், கவுதமன், ஹரிபிரசாத், ஐசக்ராஜ், கார்த்திக், சதீஷ், விக்னேஷ், விக்ரம் ஆகியோரை இடைநீக்கம் செய்து பச்சையப்பன் கல்லூரி முதல்வர் அருள்மொழி செல்வன் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மாணவர்கள் மோதல்: பேருந்து கண்ணாடி உடைப்பு