ETV Bharat / jagte-raho

இணைய வழி சூதாட்டம்: உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர்!

சென்னை: டி.பி சத்திரத்தில் இணைய வழியாக பணம் வைத்து விளையாடி தோற்றதால் மனமுடைந்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

suicide in chennai
suicide in chennai
author img

By

Published : Jul 27, 2020, 7:37 PM IST

Updated : Jul 28, 2020, 8:30 PM IST

சென்னை டி.பி சத்திரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் நிதிஷ்குமார். காட்டாங்குளத்தூர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கரோனா காலத்தில் கல்லூரி விடுமுறை என்பதால், தனக்கு பிடித்த டாட்டூ போடும் தொழிலை செய்து வந்துள்ளார்.

சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் டாட்டூ நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்த நிதிஷ்குமார், இன்று நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் கடையின் உரிமையாளரை கேட்டுள்ளனர். நிதிஷ்குமாரின் வாகனம் கடையின் வாசலில் இருந்துள்ளது, தொடர்ந்து கடையின் கதவை தட்டியும் திறக்கவில்லை.

இதனையடுத்து மற்றொரு சாவியை வைத்து திறந்து பார்க்கும் பொழுது நிதிஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. அவரிடமிருந்த தற்கொலை கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றினர்.

அதில் தான் இணைய வழியாக சூதாட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக, தன் சேமிப்பு அனைத்தையும் இழந்து விட்டதாக கூறியிருந்தார். ரம்மி சர்கிள், பப்ஜி, ஐபிஎல் போன்ற இணைய விளையாட்டுகளை விளையாடி தோற்றதாகவும் அவரது நண்பர்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

இழந்த பணத்தை மீட்க வேண்டும் என்ற நோக்கத்தில் வேலை பார்த்த கடையில் உள்ள பணத்தை வைத்து கேஸ்ட்ரோ க்ளப் என்ற இணைய வழி சூதாட்டத்திலும் விளையாடியுள்ளார். அதிலும் தோற்ற காரணத்தினால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

suicide in chennai
மாணவர் எழுதிய கடிதம்

தற்கொலை செய்து கொள்வது தவறு என்பதை உணர்ந்த நிதிஷ், பெற்றோர், நண்பர்கள், காதலி ஆகியோருக்கு கடிதத்தில் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக தகவலறிந்த அமைந்தகரை காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து நிதிஷ்குமார் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Last Updated : Jul 28, 2020, 8:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.