ETV Bharat / jagte-raho

சென்னையில் மீண்டும் தலைதூக்கும் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டம்! - சென்னை சூதாட்டம்

சூதாட்டத்தில் 20 லட்சம் ரூபாய் வரை இழந்த இளைஞர் அளித்த புகாரின் பேரில், 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கானது மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

online gambling in chennai
online gambling in chennai
author img

By

Published : Jan 22, 2021, 10:00 PM IST

சென்னை: அமைந்தகரையில் இணையம் வாயிலாக கிரிக்கெட் ஆட்டத்தை வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக அண்ணா நகர் துணை ஆணையர் ஜவஹருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இது தொடர்பாக காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டபோது, லக்ஷ்மி டாக்கிஸ் சாலை அருகில் உள்ள இடத்திருந்து ஜித்தேந்தரை என்பவரை பிடித்து விசாரித்தனர். இவர் சென்னை தியாகராய நகரைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

தொடர்ந்து நடந்த விசாரணையில், இந்திய - ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை வைத்து இணையத்தில் சூதாட்டம் ஆடியதாக தெரிவித்துள்ளார். தான் சுமார் 20 லட்ச ரூபாய் பணத்தை சூதாட்டத்தில் இழந்துள்ளதாகவும் காவல் துறையினரிடத்தில் தெரிவித்துள்ளார். ஹூக்கா பாரில் அமைந்தகரைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் மூலமாக கிடைத்த நட்பில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து அமைந்தகரையில் சைக்கிள் உதிரி பாகங்கள் கடை நடத்திவந்த சுரேஷ் ஜெயின் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். இவர் கிரிக்கெட் சூதாட்டத்தில் தரகராக செயல்பட்டு பலரையும் சூதாட்டத்தில் ஈடுபடுத்தியது அம்பலமானது.

இணைய கிரிக்கெட் சூதாட்டம் செயல்படும் விதம்

இந்த இணையவழி சூதாட்டம் எவ்வாறு செயல்படுகிறது என சைபர் க்ரைம் காவல் துறையினர் விசாரணை செய்ததில், லோட்டஸ் புக் 247 (lotus book 247) என்ற பெயரில் இணையதளம் உருவாக்கி, அதன் மூலம் சூதாட்டம் நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் முதலில் பணம் செலுத்தி உள்நுழைந்து கடவுசொல்லைப் பெற்றுக் கொள்ளவேண்டும். அதன் பிறகு விளையாட்டிற்கு ஏற்ப புள்ளிகள் கொடுக்கப்படுமாம். எவ்வளவு புள்ளிகள் வேண்டுமானாலும் விலை கொடுத்து வாங்கி கொள்ளலாம். அதன் பின் இந்தியா, ஆஸ்திரேலிய அணியில் விளையாடும் இரு அணியிலிருந்து விளையாடும் வீரர்கள் மீது பந்தயம் கட்டப்படும்.

தொடர்ந்து அவர்கள் விளையாடுவதை பொறுத்து புள்ளிகள் ஏறும். அதை பணமாக மாற்றிக்கொள்ளலாம். மேலும் வீரர்கள் எவ்வளவு ரன் அடிப்பார்கள், விக்கெட் எடுப்பார்கள் எனவும் பணம் பந்தயமாக வைக்கப்படும் என்கிறார்.

இந்த சூதாட்ட இணையதளத்தை உருவாக்கிய முக்கிய தரகர்கள் யார் என சைபர் கிரைம் ஆய்வு செய்ததில், இது இங்கிலாந்தில் இருந்து செயல்படுவதாக கண்டறிந்துள்ளனர். மேலும் கிரிக்கெட் விளையாட்டு மட்டுமல்லாமல் டென்னிஸ், கால்பந்து என ஒவ்வொரு நாளும் நடக்கும் விளையாட்டு போட்டிகளுக்கு ஏற்ப இணையத்தில் பணம் கட்டி சூதாட்டம் நடத்தியது தெரிய வந்துள்ளது.

தேர்தலை வைத்து சூதாட திட்டம்

இவை போதாதென்று, நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலை வைத்து யார் வெற்றி பெறுவார்கள் என சூதாட்டம் நடத்த திட்டமிட்டிருந்ததையும் காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். ஏற்கனவே நவம்பர் மாதம் லோட்டஸ் என்ற பெயரில் செயலி உருவாக்கி சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை யானைக்கவுனி காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களுக்கும் கைதான கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா எனவும் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த வழக்கில் பிடிபட்ட ஒவ்வொருவரை விசாரிக்கும் போது, அடுத்தடுத்த சங்கலி தொடர்போல் பல தரகர்கள், முக்கிய புள்ளிகள் தொடர்பு, வெளிநாட்டிலிருந்து இணையதள இயக்கம் ஆகியவற்றால் வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏற்கனவே ஆன்லைன் ரம்மி போன்ற பணம் வைத்து விளையாடும் விளையாட்டுக்கு அரசு தடை விதித்த நிலையில், இந்த வகையான இணையதள சூதாட்டம் தலை தூக்க தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.