திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்துள்ள ஜாம்புவானோடையில் உள்ள சின்னாங்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (61). இவர் நேற்று முன்தினம் (செப்டம்பர் 1) முத்துப்பேட்டை அருகேயுள்ள கோரையாற்றுக்கு மீன்பிடிக்கச் சென்றார்.
ஆனால், இரவு முழுவதும் வீட்டிற்கு திரும்பாததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர், ஆற்றுக்குச் சென்று பார்த்தபோது சந்தேகமான முறையில் கோவிந்தராஜ் உயிரிழந்து கிடைந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முத்துப்பேட்டை காவல் துறையினர், முதியவரின் உடலை மீட்டு உடற்கூறாய்விறகாக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.