நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த நாகவிளாகம் கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் என்ற 66 வயது முதியவர், வீட்டின் அருகே உள்ள 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதுகுறித்து, அந்த சிறுமி தனது தாயிடம் கூறி அழுதுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தாய், நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடம் விரைந்த காவல் துறையினர், பாலியல் வல்லுறவு செய்த தங்கவேலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.