ETV Bharat / jagte-raho

லட்சக்கணக்கான பழைய ரூபாய் நோட்டுகள் கோவையில் பறிமுதல்! - பழைய 500 ஆயிரம் ரூபாய் நோட்டு பறிமுதல்

கோவை: வடவள்ளி பகுதியில் இரண்டு லட்சத்து 68 ஆயிரம் மதிப்புள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை காவல் துறை பறிமுதல் செய்துள்ளது.

fake currency
fake currency
author img

By

Published : Dec 29, 2019, 12:52 PM IST

கோவை மாவட்டம், வடவள்ளி லட்சுமி நகர் பகுதியில் உள்ள திமுக பிரமுகர் ஆனந்தன் என்பவரின் பங்களாவில் ஷேக், ரஷீத் ஆகிய இருவர் வாடகைக்கு தங்கி வருகின்றனர். அவர்களிடம் தடைசெய்யப்பட்ட பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இருப்பதாக காவல் துறைக்கு தெரிய வந்துள்ளது.

இதையடுத்து துணைக் கண்காணிப்பாளர் வேல்முருகன், ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையில் வடவள்ளி காவல்துறையினர் 35க்கும் மேற்பட்டோர் பங்களாவை நேற்று மாலை சோதனை செய்தனர்.

அந்த பங்களாவில் உள்ள ஒரு அறையில் இருந்து 268 கட்டுகள் கொண்ட பழைய 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் கண்டெடுக்கப்பட்டு, மொத்தம் 2.68 லட்சம் மதிப்புள்ள பழைய நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வீட்டில் குடியிருந்த ரஷீத், ஷேக் ஆகியோரை காவல் துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.

பங்களாவில் பறிமுதல் செய்யப்பட்ட பணம்

இதையும் படிங்க: ரூ. 22 லட்சம் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் பறிமுதல்!

Intro:கோவை வடவள்ளி பகுதியில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்.Body:கோவை வடவள்ளி பகுதியில் உள்ள திமுக பிரமுகருக்கு சொந்தமான வீட்டில் பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்.

வடவள்ளி லட்சுமி நகரில் உள்ள திமுக பிரமுகர் ஆனந்தன் என்பவரின் பங்களாவில் ஷேக், ரஷீத் ஆகிய இருவர் வாடகைக்கு தங்கி வருகின்றனர். அவர்களிடம் தடைசெய்யப்பட்ட பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இருப்பதாகவும் புதிய ரூபாய் நோட்டுகளில் ஒரு லட்சம் கொடுத்தால் அதற்கு பதிலாக இரண்டு லட்சம் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் தருவதாக தெரிவித்திருந்தனர். இச்செய்தியைக் கேட்டு பலரும் அங்கு சென்றுள்ளனர். இதுகுறித்து மத்திய புலனாய்வு பிரிவினர், மாவட்ட கண்காணிப்பாளர் சதீஷ்குமாருக்கு தகவல் வந்தது. அதன் பின் அவர்களின் உத்தரவின் பேரில் டிஎஸ்பி வேல்முருகன் ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையில் வடவள்ளி காவல்துறையினர் 35 கும் மேற்பட்டோர் பங்களாவை நேற்று மாலை சோதனை செய்தனர்.

அந்த பங்களாவில் உள்ள ஒரு அறையில் இருந்து 268 கட்டுக்கள் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் கண்டெடுக்கப்பட்டன மொத்தம் 2.68 லட்சம் மதிப்புள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் அதில் உள்ள கட்டுகளில் மேலே உள்ள முதல் தாள் மற்றும் கீழே உள்ள கடைசி தாள்களில் மட்டுமே பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இருந்தது இடையில் அனைத்தும் காகிதங்கள் வைக்கப்பட்டிருந்தன.

அந்த பங்களாவில் அமைதிப்படை 2 திரைப்படம், மெட்டிஒலி சின்னத்திரை நாடகம் போன்றவை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் அந்த வீட்டில் குடியிருந்த ரஷீத், ஷேக் ஆகியோர் அங்கு இல்லாததால் காவல்துறையினர் அவர்களை தொலைபேசியில் அழைத்துக் கொண்டனர் ஆனால் அவர்கள் செல்போன் ஆப் செய்யப்பட்டுள்ளதால் காவல்துறையினர் அவர்களை தேடி வருகின்றனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.