ETV Bharat / jagte-raho

எண்ணெய் ஆலையில் தீ: ரூ.25 லட்சம் பொருள்கள் சேதம்! - நீலகிரி செய்திகள்

எண்ணெய் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 25 லட்சத்திற்கும் அதிகமான பொருள்கள் எரிந்து நாசமாகின. இந்தத் தீ விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

oil warehouse fire in ooty
oil warehouse fire in ooty
author img

By

Published : Dec 23, 2020, 4:58 PM IST

நீலகிரி: எண்ணெய் ஆலையில் ஏற்பட்ட தீயில் ரூ. 25 லட்சத்திற்கும் அதிக மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாகின.

நீலகிரி மாவட்டம், பந்தலூர் எருமாடு பகுதியில் சஜி என்பவர், மாதா எண்ணெய் ஆலை நடத்திவருகிறார். வழக்கம்போல் அவர் நேற்றிரவு நிறுவனத்தை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்ற வேளையில், இன்று காலையில் அவரது எண்ணெய் ஆலை தீபிடித்து எரிவதாக தகவல் வந்துள்ளது.

இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் ஒரு மணிநேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தத் விபத்தில் ஆலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 25 லட்சத்திற்கும் அதிக மதிப்புள்ள எண்ணெய் தீயில் நாசமடைந்தது.

எண்ணெய் ஆலையில் தீ

மின் கசிவால் விபத்து ஏற்பட்டதா அல்லது யாரேனும் தீய செயலில் ஈடுபட்டனரா என்ற கோணங்களில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.