அண்ணா நகர் 2ஆவது அவென்யூவில் உள்ள நகைக்கடையில் (தனிஷ்க்) பாதுகாவலராகப் பணிபுரிபவர் அருள்மணி (57). இவர் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புப் பணியில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை ஈடுபடுவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி துப்பாக்கித் தோட்டாக்கள் வைக்கும் கைப்பையை கடையின் வெளியே வைத்துவிட்டு, கடைக்கு உள்ளே வருகைப்பதிவு கையொப்பமிடச் சென்றுள்ளார் அருள்மணி. திரும்பிவந்து பார்த்தபோது கைப்பையிலிருந்த ஐந்து தோட்டாக்கள், அலைபேசி ஆகியவை காணாமல் போயிருந்தன.
இதனையடுத்து அண்ணா நகர் காவல் நிலையத்தில் அருள்மணி புகார் அளித்தார். இது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவந்த நிலையில், தோட்டாக்களைத் திருடியதாக ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சாகர் மாலிக் (22) என்பவரைக் காவல் துறையினர் இன்று கைதுசெய்துள்ளனர். மேலும் அவரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: காரில் கடத்தப்பட்ட 2 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்