ETV Bharat / jagte-raho

ஊரடங்கால் வேலையின்றி, வருமானமின்றி தவித்த இளைஞர் தற்கொலை! - சென்னை தற்கொலை

கரோனா ஊரடங்கின் காரணமாக, சரிவர வேலை இல்லாததால் பணம் இல்லாமல் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாத சூழ்நிலை இளைஞர் மகேஷ் குமாருக்கு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்து வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

no work chennai it teen suicide
no work chennai it teen suicide
author img

By

Published : Oct 2, 2020, 6:26 AM IST

சென்னை: ஊரடங்கால் வேலையின்றியும், வருமானம் இல்லாமலும் வங்கியில் வாங்கிய கடனை கட்ட முடியாமல் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பவானி நகர் ஐந்தாவது தெருவில் வசித்துவருபவர் ராமு (54). இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்துவருகிறார். அவரது மனைவி சுகுணா (42). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். பி.காம் பட்டதாரியான இவர்களது இரண்டாவது மகன் மகேஷ் குமார் (25) தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்துவந்துள்ளார். இவரின் மாதம் வருமானம் 25,000 ரூபாய் எனக் கூறப்படுகிறது.

இவர் தனியார் வங்கிகளில் கடன் அட்டை மூலம் இரண்டு லட்ச ரூபாய்க்கு மேலாகக் கடன் பெற்றுள்ளார். இரண்டு வருடங்களாக வங்கியில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டி வந்துள்ளார். இச்சூழலில், கரோனா ஊரடங்கின் காரணமாக, சரிவர வேலை இல்லாததால் பணம் இல்லாமல் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் வங்கி ஊழியர்கள் தொடர்ந்து வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுமாறு தொலைபேசி மூலம் அழுத்தம் கொடுத்துவந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அவரின் வீட்டிற்கு ஐசிஐசிஐ வங்கியிலிருந்து வழக்குரைஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதனால் மகேஷ் குமார் மன உளைச்சக்கு ஆளாகியுள்ளார். இச்சூழலில், நேற்று (செப். 30) ஐசிஐசிஐ வங்கியிலிருந்து தொலைபேசி மூலம் மகேஷ்குமாரைத் தொடர்புகொண்டு, விரைவில் பணம் செலுத்துமாறு மிரட்டும் தொனியில் பேசியுள்ளனர்.

அதையடுத்து மகேஷ்குமார் அவரின் தந்தையிடம் வங்கியில் கடன் இருப்பதாகக் கூறி அதைக் கட்டுவதற்கு ஐந்து லட்ச ரூபாய் கேட்டுள்ளார். இதற்கு அவரின் தந்தை ஐந்து லட்ச ரூபாய் எப்படி ஏற்பாடு செய்வது என்று தெரியவில்லை எனக் கூறியுள்ளார்.

பின்னர் மகேஷ்குமார் அவரின் அறைக்குத் தூங்கச் சென்றுள்ளார். நேற்று (அக். 1) காலை அவரின் தாய் சுகுணா மகேஷ் குமார் அறைக்கு காப்பி எடுத்துச் சென்றபோது, நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்து, கணவர் உதவியுடன் கதவை உடைத்துப் பார்த்துள்ளார். அப்போது மகேஷ் குமார் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதைக் கண்டு அவரின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இது குறித்து சங்கர் நகர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் விரைந்துவந்த காவல் துறையினர் உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.