விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள அலுவலங்கள், கடைகள் உள்ளிட்டவைகளில் பரிச்சயமில்லாத ஒருவர், அனாதை இல்லத்திற்கு நன்கொடை கேட்பதுபோல் நடித்து நூதன முறையில் செல்ஃபோன்களை திருடிச் செல்கிறார்.
இந்த நூதன திருட்டு சம்பவங்கள் ஆனந்தா ஸ்டோர்ஸ், ஃபைனான்ஸ் அலுவலகம் உள்ளிட்ட மூன்று இடங்களில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளன. பாதிக்கப்பட்ட இருவர் இந்த நூதன திருட்டு குறித்து அருப்புகோட்டை பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்தவகை திருட்டு அலுவலகங்களைக் குறிவைத்து மிகவும் திட்டமிடபட்டு தைரியமாக செய்யப்படுவதாகவும், இவ்வாறு செய்யும் நபர்களை நீங்கள் அடையாளம் கண்டால் உடனே தகவல் தெரிவிக்குமாறும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். நாளுக்குநாள் இதுபோன்ற நூதன திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.