திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த கரிகாலன் நகர், பெரியார் நகர், பவானி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று கார்கள், ஒரு லாரி, குட்டி யானை, ஆட்டோ உள்ளிட்டவற்றின் கண்ணாடிகளை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நள்ளிரவில் உடைத்துள்ளார்.
இதுகுறித்து செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல்துறையினர் அங்கு உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து பார்த்ததில் ஒருவர் கார் கண்ணாடிகளை உடைக்கும் காட்சி பதிவாகியிருந்தது.
இதனையடுத்து, அவரை பிடித்து விசாரித்ததில் திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி பகுதியைச் சேர்ந்த ஜான் என்பதும், அவர் சற்று மனநிலை சரியில்லாதவர் எனவும் தெரியவந்தது. இதனையடுத்து அவரைக் கைது செய்த காவல்துறையினர் சென்னையில் உள்ள மனநல காப்பகத்தில் ஒப்படைத்தனர்.