தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஜோதி நகரைச் சேர்ந்தவர்கள் ராஜேந்திரன், அவரது மகன் செல்வமோகன். இவர்கள் கழுகாசலபுரம் பகுதியில் முழு இயந்திர தீப்பெட்டி ஆலை நடத்தி வருகின்றனர். நேற்று இந்த ஆலையில் தீக்குச்சிகள் வைக்கப்பட்டிருந்த அறையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்துவந்த கோவில்பட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், விளாத்திகுளம் தீயணைப்பு நிலையத்தில் இருந்தும் வாகனம் வரவழைக்கப்பட்டு தீயணைக்கும் பணிகள் நடைபெற்றது. இருப்பினும், இந்த விபத்தில் பல்லாயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தீப்பெட்டிகள் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்தை மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜெகதீஷ் பார்வையிட்டார். இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: