சென்னை ஆவடி, காமராஜ் நகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (35). இவரது மனைவி பாக்கியலட்சுமி (26). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்தத் தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.
மதுப்பழக்கம் உடைய சதீஷ்குமார் சரிவர வேலைக்குச் செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி வந்துள்ளார். குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து அடிக்கடி பாக்கியலட்சுமியுடன் தகராறில் ஈடுபடுவதை வழக்கமாகவும் கொண்டுள்ளார்.
இந்நிலையில், மனைவியின் 14 சவரன் தங்க நகைகளை எடுத்து சதீஷ்குமார் வீண்செலவு செய்துவிட்டதாக சொல்லப்படும் நிலையில், அவர்கள் இருவருக்கும் இடையே கடந்த 28ஆம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், சதீஷ்குமார், இரும்புத் தடியால் பாக்கியலெட்சுமியை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதனால் அவருக்கு கை எலும்பு முறிந்தது.
இதைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்குப் பின்னர் தான் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆவடி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையிலான காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சதீஷ்குமாரை கைதுசெய்தனர். பின்னர், அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, திருத்தணி கிளை்ச் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஏலச்சீட்டில் ரூ.2 கோடி மோசடி: தப்பியோட முயன்ற தம்பதியை பிடித்த கிராம மக்கள்!