திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகப் பெய்த தொடர் மழையால் மலைப்பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் காட்டு வெங்கடாபுரம் அருகில் உள்ள மலைப்பகுதியில் குதிரைபாறை என்னும் இடத்தில் நீர் வீழ்ச்சி உருவாகியுள்ளது.
இந்த நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக மலையாம்பட்டு பகுதியைச் சேர்ந்த நேசமணி என்பவர் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்தபோது நேசமணி, பாறையில் தவறி விழுந்து மயக்கமுற்றார். பின்னர் அவரை மீட்ட அவரது நண்பர்கள் காரில் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே நேசமணி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த உமராபாத் காவல் துறையினர் அவர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: ஒருதலைக் காதல்: 17 வயது சிறுமியை குத்திவிட்டு இளைஞர் தற்கொலை