சென்னை பெரியமேடு நேவல் மருத்துவமனை சாலையை சேர்ந்தவர் சந்தியா. இவர், தனது ஆட்டோவை அடையாளம் நபர்கள் திருடிச் சென்றதாகவும், அதை மீட்டுத்தரக் கோரியும் கடந்த மாதம் பெரியமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர், சென்னை வால்டாக்ஸ் சாலையை சேர்ந்த பாலாஜியை கைது செய்து திருடிய ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
மேலும், வேறு ஏதேனும் குற்றச் சம்பவங்களில் பாலாஜிக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஏரியில் குளிக்கச் சென்ற பெண் நீரில் மூழ்கி உயிரிழப்பு - கடலூரில் பரிதாபம்!