மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை அடுத்த அந்தேரி ரயில்வே காவலராகப் பணிபுரிந்துவந்தவர் ஹரீஷ். 40 வயதான இவருக்கு திருமணமாகி மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர்.
இவரின் தந்தை குலாப் காலண்டே, மாநில காவல் துறையில் 15 ஆண்டுகள் காவலராகப் பணிபுரிந்தவர். ஹரீஷ் மதுவுக்கு அடிமையாகி, மனைவி, மகன்களை சரிவர கவனிக்காமல் இருந்துள்ளார்.
இதனால் குலாப், ஹரீஷை கண்டித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மும்பையின் புறநகர் பகுதியான போவை கணேஷ் நகர் பகுதிக்கு ஹரீஷ் வந்தார்.
அங்கு அவரின் தந்தை குலாப்புடன் தகராறில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த குலாப் வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து ஹரீஷை தாக்கினார்.
இதில் பலத்த காயமுற்ற ஹரீஷை மீட்டு அருகிலிருந்தவர்கள் மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஹரீஷ் உயிரிழந்தார். இது குறித்து போவை காவலர்கள் வழக்குப்பதிவு செய்து குலாப்பை கைது செய்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: கரோனாவை அலட்சியமாகக் கையாண்ட பெண்ணின் தந்தை மீது எஃப்ஐஆர் பதிவு!