மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மகா ஈஸ்வரன், சரவணக்குமார் என்ற இரு மாணவர்கள் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகின்றனர். இந்நிலையில், சரவணனுக்கும், மகா ஈஸ்வரனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது, சரவணக்குமாரை மகா ஈஸ்வரன் சாதியைக் கூறி முதுகில் கத்தியால் கிழித்துள்ளார். அதில், சரவணக்குமார் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
இதுகுறித்து சரவணக்குமாரின் தாய் இராசாத்தி, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய இராசாத்தி, ‘நாங்கள் பாலமேடு மறவர்பட்டி காலனியில் வசித்து வருகிறோம். அங்கு சிறு சிறு சாதி தகராறுகள் நடந்துவந்த நிலையில், பள்ளிக்கு சென்ற எனது மகனின் புத்தகப்பையை மகா ஈஸ்வரன் மறைத்து வைத்துள்ளார்.
அதனைத் திரும்பக் கேட்டதற்காக சரவணக்குமாரை மகா ஈஸ்வரன் சாதியைக் கூறி கத்தியால் முதுகில் கிழித்து இரத்தக்காயத்தை ஏற்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளித்ததால் மகா ஈஸ்வரன் குடும்பத்தினர் தனக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர் என்று கூறினார். தொடர்ந்து இராசாத்தி கூறுகையில், என் மகனுக்கு நடந்ததுபோல் வேறு எந்தவொரு மாணவனுக்கும் நடக்ககூடாது’ என்று தெரிவித்தார்.
மேலும், தனது மகனுக்கு ஏற்பட்ட அநீதிக்கு, உரிய இழப்பீடு வழங்கி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனு கொடுத்துள்ளதாக இராசாத்தி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிளேடால் கிழிக்கப்பட்ட பள்ளி மாணவரின் முதுகு... மீண்டும் தலையெடுக்கும் சாதியம்?