கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் ரபேந்திர நடேகர்(38). லாரி ஓட்டுநரான, இவர் 2018ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி கர்நாடகாவில் இருந்து லாரியில் சரக்குளை ஏற்றிக் கொண்டு திருவள்ளூர் மாவட்டம், ,பூந்தமல்லி அடுத்துள்ள சென்னீர்குப்பத்தில் உள்ள தனியார் குடோனுக்கு வந்தார். இவருடன் லாரியில் கீளினரான சந்தோஷ்பண்டரகிரி என்பவரும் வந்தார். இந்நிலையில் சரக்குகளை இறக்கிய பிறகு கிளீனரான சந்தோஷ்பண்டரகிரி மது குடிப்பதற்காக ரபேந்திர நடேகரிடம் பணம் கேட்டுள்ளார்.
ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே, இருவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்றப்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கிளீனர் சந்தோஷ்பாண்டகிரி, அருகில் கிடந்த கட்டையை எடுத்து ஓட்டுநரான ரபேந்திர நடேகரை தலையில் பலமாக தாக்கியதில் படுகாயமைடந்த அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
பின்னர் லாரியில் இருந்த பெட்ஷீட்டால் ஓட்டுநரின் உடலை மூடி அதேப் பகுதியில் வைத்து எரித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர் இது குறித்து குடோனின் காவலாளி முனியப்பன் பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கர்நாடகாவில் தலைமறைவாக இருந்த சந்தோஷ் பண்டரகிரி கைது செய்து தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்தனர்.
இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி செல்வநாதன் முன்னிலையில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளியான சந்தோஷ்பண்டரகிரிக்கு ஆயுள் தண்டணையும், 10ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். மேலும் அபராத தொகையை கட்டத் தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.