சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் என்பவர் பூக்கடை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகாரில் நான்கு லட்ச ரூபாய் மதிப்பிலான நிலத்தை வாங்கி தருவதாக கூறி குணசேகரன் என்ற நபர் தன்னை ஏமாற்றி விட்டதாக தெரிவித்திருந்தார். இதனடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்துவந்தனர்.
இந்த சூழலில் நேற்று தலைமைச் செயலகம் அருகே கோட்டைக் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்தபோது காரின் பதிவு எண் மாற்றப்பட்டு மோசடியில் ஈடுப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து காரின் ஓட்டுநரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அவர் கொருக்குபேட்டை பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பதும் அவர் கார் ஓட்டுநர் என்பதும் தெரிந்தது. மேலும் அவரது மனைவி தலைமைச் செயலகத்தில் பதிவு எழுத்தாளராக உள்ளதும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்வதும் தெரியவந்தது. அவர் தனது மனைவியின் பெயரில் கார் வாங்கி பதிவு எண்களை மாற்றி பல பேரிடம் நில மோசடியில் ஈடுப்பட்டுவந்ததும் காவல்துறையின் விசாரணையில் அம்பலமானது.

இதையடுத்து வியாசார்பாடியில் வசித்துவரும் குணசேகரனின் மனைவி புஷ்பலதாவையும் கைது செய்த காவல்துறையினர் இருவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் குற்றச்செய்திகளை படிக்க: