ETV Bharat / jagte-raho

விடுமுறை இல்லாததால் ஊருக்கு வராத கணவன் - தூக்கில் தொங்கிய மனைவி

கோயம்புத்தூர்: மத்திய தொழில் பாதுகாப்புப்படை காவலர் விடுமுறை எடுத்து ஊருக்கு வர முடியாது எனக் கூறியதால், காணொலி அழைப்பு வாயிலாக தற்கொலை செய்து கொள்வதாகக் கூறி, எச்சரித்த மனைவி, தான் கூறியபடி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Lady suicide due to probe with husband
Lady suicide due to probe with husband
author img

By

Published : Aug 21, 2020, 4:13 AM IST

Updated : Aug 21, 2020, 10:55 AM IST

கோயம்புத்தூர் மாவட்டம் முத்துக்கவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர், ராஜேஷ்குமார். இவர் சங்கீதா என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது ராஜேஷ்குமார் மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் காவலராக நாகலாந்தில் பணியாற்றி வருகிறார்.

இவ்வேளையில், உடனடியாக விடுமுறை எடுத்துக் கொண்டு சொந்த ஊருக்கு வருமாறு சங்கீதா கோரியுள்ளார். ஆனால், உடனடியாக விடுமுறை எடுக்க முடியாது எனவும், பின்னர் வருவதாகவும் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த சங்கீதா, கணவன் ராஜேஷ் குமாருக்கு காணொலி அழைப்பு மூலம் தொடர்புகொண்டு, தான் தற்கொலை செய்து கொள்வதாகக் கூறியுள்ளார். தொடர்ந்து மின்விசிறியில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார். இதுகுறித்து சூலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு !

Last Updated : Aug 21, 2020, 10:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.