கொச்சி (கேரளா): உள்நாட்டு பொருளாதார சூழலை சீர்குலைக்கும் வகையில் பெரும் அச்சுறுத்தல் தரும் குற்றத்தை தங்க நகைக்கடத்தல் மங்கை ஸ்வப்னா சுரேஷ் செய்துள்ளார் என்பதை, கிடைத்த தடையங்கள் தெளிவுப்படுத்துகிறது என்று நீதிமன்றத்தில் சுங்கத் துறை தெரிவித்துள்ளது.
தங்க நகைக்கடத்தல் வழக்கில் சிக்கிய கேரள அரசின் உயர் பதவி வகித்த ஸ்வப்னா சுரேஷ் பிணை மனு மீதான விசாரணை எர்ணாகுளம் நீதிமன்றத்தில் கூடுதல் தலைமை நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தங்கள் தரப்பு வாதத்தை சுங்கத் துறை தரப்பில் சமர்ப்பிகிக்கப்பட்டது.
'இத்துணுண்டு பார்சல்ல இம்புட்டு தங்கமா? ஸ்வப்னாவுக்கும் தொடர்பா?
அதில், “இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் பெரும் பின்புலத்தைக் கொண்டவர். அரசு உயர் பதவியில் இருந்து கொண்டே அதனை தவறாக பயன்படுத்தி பல தேச துரோக செயல்களை செய்தவர். அவர் தன் பின்புலத்தை வைத்து தரவுகளை அழிக்கும் பணிகளை மேற்கொள்ள சாத்தியக் கூறுகள் அதிகம் உண்டு. உள்நாட்டு பொருளாதார சூழலை சீர்குலைக்கும் வகையில் பெரும் அச்சுறுத்தல் தரும் குற்றத்தை தங்க நகைக்கடத்தல் மங்கை ஸ்வப்னா சுரேஷ் செய்துள்ளார் என்பதை, கிடைத்த தடையங்கள் தெளிவுப்படுத்துகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 6ஆம் தேதி தேசிய புலனாய்வு முகமையில் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த ஸ்வப்னா சுரேஷ் பிணை மீதான விசாரணையை ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அன்று நடந்த விசாரணையில், ஸ்வப்னா சுரேஷின் பிணை கோரிக்கையை எதிர்த்து வாதிட்ட தேசிய புலனாய்வு முகமை, ஸ்வப்னா சுரேஷ் முன்னாள் முதன்மை செயலர் எம். சிவசங்கர் மூலம் முதலமைச்சர் அலுவலகத்துடன் ஒரு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தியிருந்தார் என்பதற்கான ஆவணங்களை நீதிமன்றத்தின் முன் சமர்ப்பித்தது.
யூஏஈ தூதரகத்துடன் ஸ்வப்னா சுரேஷிற்கு நெருங்கிய தொடர்பு: என்ஐஏ
முன்னதாக, ஸ்வப்னா வங்கி பெட்டகத்திலிருந்து ஒரு கோடி ரூபாய் ரொக்கப் பணமும், 982.5 கிராம் மதிப்புள்ள தங்க நகைகளையும் மத்திய புலனாய்வுப் பிரிவு அலுவலர்கள் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக முகவரிக்கு, ஜூலை மாதம் 5ஆம் தேதி வந்த சரக்குப் பெட்டிகளில் 30 கிலோ கடத்தல் தங்கம் இருப்பது தெரியவந்தது. இந்தக் கடத்தலில் பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பிருக்கலாம் எனக் கருதப்பட்டதால், இவ்வழக்கானது தேசிய புலனாய்வு முகமையிடம் (என்ஐஏ) ஒப்படைக்கப்பட்டது.
ஸ்வப்னா சுரேஷ் உள்பட மூவரையும் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி!
இதையடுத்து, இக்கடத்தல் சம்பவம் தொடர்பாக கேரள அரசின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணிபுரிந்து வந்த ஸ்வப்னா சுரேஷ், அவரது நண்பர் சந்தீப் நாயர், பி.எஸ். சரீத் உள்பட 12 பேரை என்ஐஏ அலுவலர்கள் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இச்சூழலில் தற்போது அமலாக்கத் துறை முதற்கட்டமாக, ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், பி.எஸ். சரீத் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று அவர்களை காவலில் எடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.