காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த எல் எண்டத்தூர் கிராமத்தில் நேற்றிரவு (டிச. 16) பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள்கள் வாகனத்தில் கடத்திவரப்பட்டு காரில் மாற்றப்படுவதாக உத்திரமேரூர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தப்பிய கடத்தல்காரர்கள்
இதையடுத்து தகவலின் அடிப்படையில் மதுராந்தகம் காவல் துணைக் கண்காணிப்பாளர் செல்வி கவினா, உத்திரமேரூர் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காவல் துறையினர் வருவதைக்கண்ட கடத்தல்காரர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு தப்பியோடினர்.
குட்கா பறிமுதல்
காவல் துறையினர், அந்தக் கடத்தல் வாகனத்தைத் திறந்து சோதனையிட்டபோது 15 அட்டைப்பெட்டிகள், 15 கோணிப்பைகளில் சுமார் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா, புகையிலைப் பொருள்கள் உள்ளே இருப்பது தெரியவந்தது.
அதையடுத்து குட்கா, புகையிலைப் பொருள்கள், கடத்தலுக்குப் பயன்படுத்திய டாட்டா ஏஸ் வாகனம், கார் உள்ளிட்டவற்றை காவல் துறையினர் பறிமுதல்செய்து வழக்குப்பதிந்து தப்பியோடிய கடத்தல்காரர்களைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க...சென்னையில் கல்லூரி, மாணவர் விடுதிகளில் பரிசோதனை தீவிரம்!