கள்ளக்குறிச்சி: வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியின் தாலி, அலமாரியில் இருந்த பணம் ஆகியவற்றைத் திருடிச் சென்ற கொள்ளையர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள எலவடி கிராமத்தில் சின்னகவுண்டர் - மல்லிகா தம்பதி வசித்து வருகின்றனர். இச்சூழலில் மல்லிகா தனது வீட்டில் இரவு தூங்கிக்கொண்டிருந்த வேளையில், அதிகாலை வீட்டிற்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், மல்லிகாவின் கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்கத் தாலியையும், அலமாரியில் இருந்த ஒன்றரை லட்சம் ரொக்க பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இது குறித்து மல்லிகாவின் கணவர் சின்னகவுண்டர், சின்னசேலம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.